மீரா தேவதையா.. ஃபாத்திமாவிடம் பாய்ந்த வனிதா.. அப்படியே அந்தர் பல்டி! என்னா வாய்டா சாமி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீராவை தேவதை என்று கூறிய ஃபாத்திமாவை உண்டு இல்லை என செய்துவிட்டார் வனிதா.
நேற்றைய எபிசோடில் மீராவை பிராங்க் பண்ணுமாறு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மீராவின் பெயரை நாமினேட் செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.
இதனை சக ஹவுஸ்மேட்ஸிடம் கூறுகிறார் சாண்டி. பின்னர் ஒவ்வொருவராக மீராவை நாமினேட் செய்வதாக கூறி அதற்கான காரணத்தையும் சொல்கின்றனர்.

மீராவின் பெயரை கூறுகிறோம்
அப்போது வனிதா கேங்க் மட்டும் சொல்லி வைத்தாற்போல் மதுமிதாவைதான் வெளியே அனுப்ப விரும்பினோம். ஆனால் மற்றவர்கள் ஒரு மனதாக மீராவின் பெயரை நாமினேட் செய்ததால் மீராவின் பெயரை கூறுகிறோம் என்றனர்.

கண்ணீர் விட்ட ஃபாத்திமா பாபு
பிராங்க், கேம் என்ற போதும் வனிதா மற்றும் அவரது கேங்க் தங்களின் மனதில் உள்ளதையே பேசினர். இதைத்தொடர்ந்து பேசிய ஃபாத்திமா பாபு, மீராவை தேவை என்றார். அவளை புரியாதவர்களுக்கு அது தெரியாது எனக் கூறி கண்ணீர் விட்டார்.

எப்படி தேவதை என்று கூறலாம்?
அப்போது வனிதா கேங்க் முனக ஆரம்பித்துவிட்டது. பின்னர் கிச்சனில் நின்ற வனிதா, மீராவை எப்படி தேவதை என கூறலாம் என்று ஃபாத்திமாவிடம் மல்லுக்கட்டினார்.

எனக்கு ஒபினியன் இருக்கக்கூடாதா?
அதற்கு பதிலனித்த ஃபாத்திமா எனக்கும் மீராவுக்குமான ஈக்வேஷனை வைத்துதான் நான் கூறினேன். உனக்கு ஒரு ஒபினியன் இருக்கும் போது எனக்கு இருக்கக்கூடாதா என கேட்கிறார் ஃபாத்திமா.

வெறுப்பேற்றிய வனிதா
ஃபாத்திமா கொடுக்கும் பதிலுக்கெல்லாம் நக்கலாக பதில் கூறியும் தலையை ஆட்டியும் வெறுப்பேற்றினார் வனிதா. நல்லா பண்றீங்க என கேவலமான ஒரு சிரிப்புடன் ஃபாத்திமாவின் வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் அவருடன் ஒன்டிக்கு ஒன்டி நின்றார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஃபாத்திமா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

தொடரும் வனிதாவின் ஆட்டம்
அடுத்த சில நிமிடங்களிலேயே மீராவிடம் மற்றவர்களை பற்றி போட்டுக்கொடுத்து நல்லவள் போல் நடித்தார் வனிதா. உன்னிடம் எல்லோரும் நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர் என உசுப்பேற்றி மீராவையும் தனது பக்கம் இழுத்து கொண்டார் வனிதா. இப்படியாக தொடர்கிறது வனிதாவின் ஆட்டம்.


Click it and Unblock the Notifications











