அதெப்படி வனிதாவை மட்டும் சும்மா விட்டுடுமா விஜய் டிவி.. திரும்பவும் 'பத்தவெச்சுட்டியே' பரட்ட!
Recommended Video
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார் நடிகை வனிதா.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றியவர் நடிகை வனிதா. மக்கள் தன்னை திட்டினாலும் பரவாயில்லை என பிக் பாஸ் டிஆர்பிக்காக கடுமையாக உழைத்தார். அவரது இந்த அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு, நிகழ்ச்சியின் இறுதிகட்டம் வரை வனிதாவை பிக் பாஸ் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

பிக் பாஸ் முடிந்துவிட்ட நிலையில், தற்போது செம பிஸியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் வனிதா. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா மெகா சீரியலில் வனிதாவும் இணைந்துவிட்டார். அவருக்கு அதில் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் டிவியின் புதிய விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் வனிதா பங்கேற்கிறார். குக் வித் கோமாளி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வனிதா குக்கா அல்லது கோமாளியா என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு புறணி பேசும் காமெடி நிகழ்ச்சி என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் கலக்கப்போவது யாரு பாலா, வனிதாவுடன் புறணி பேசுவது போல் தான் புரொமோ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் வனிதாவுக்கு திரைப்பட வாய்ப்புகளும் குவிகின்றன. நிறைய படங்களில் அவரை வில்லியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஒளிபரப்பான இரண்டு சீசன்களில் கலந்துகொண்ட எந்த ஒரு போட்டியாளரும் வனிதா அளவுக்கு டக்கென பிஸியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











