ரஜினி மீது எவ்வளவு பாசம்.. யப்பா வனிதா விஜயகுமார், ஜோவிகா செய்த செம விஷயம்
சென்னை: நடிகை வனிதா கோலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க நடன இயக்குநர் ராபர்ட்டும், வனிதாவும் சேர்ந்து Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் வனிதாவும், ஜோவிகாவும் ரஜினிகாந்த்தை சந்தித்திருக்கிறார்கள்.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.


அந்தகன் வனிதா: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.
வனிதாவின் கேரக்டர்: வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் பேசக்கூடியவர். தனது சகோதரர் அருண் விஜய் குறித்து தனதும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக பேட்டிகளில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது சில சமயங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேசமயம் அவர் அப்படி பேசுவதை பாராட்ட வேண்டும் என்றும் ஒருதரப்பினர் ஆதரவும் தெரிவித்துவருகிறார்கள்.
வனிதாவின் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் இப்போது பிரபு சாலமன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு ரஜினியும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆகாஷை பிரிந்த வனிதா அடுத்ததாக ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
தயாரிப்பாளர் ஜோவிகா: வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டார். ஆனால் டைட்டில் வெல்ல முடியவில்லை. சூழல் இப்படி இருக்க ராபர்ட்டும், வனிதாவும் இருக்கும்படி திருமண அழைப்பிதழ் ஃபார்மெட்டில் ஒரு புகைப்படம் வெளியானது. அதனையடுத்து அவர்களுக்கு திருமணம் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஏற்கனவே அவர்கள் லிவிங் டூ கெதரில் இருந்ததால் கண்டிப்பாக திருமணம்தான் என்று பலரும் உறுதியோடு பேசினார்கள்.
ரஜினியுடன் சந்திப்பு: ஆனால் அது Mrs&Mr என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியானது பின்னர் தெரிய வந்தது. அந்தப் படத்தை ஜோவிகாதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் வனிதாவும், ஜோவிகாவும் சந்தித்தார்கள். அப்போது படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினி வெளியிட்டார். மேலும் இருவரையும் வாஞ்சையோடும், அன்போடும் ரஜினி அணைத்த புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. படமானது ஜூலை நான்காம் தேதி வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











