பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல்.. நிரூப்பை மோசமாக திட்டிய வனிதா விஜயகுமார்.. கேட்க கமல் கூட இல்லையே?

சென்னை: கமல் இனி தொகுத்து வழங்கப் போவதில்லை என்றதுமே பாதி பேர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

இந்நிலையில், எபிசோடை சுவாரஸ்யமாகவும் சர்ச்சைகள் மிகுந்ததாகவும் மாற்ற ஏஞ்சல்ஸ் vs டெமன்ஸ் டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதே அசுரர்கள் vs தேவர்கள் டாஸ்க்கை பட்டி டிக்கெரிங் பார்த்துள்ளனர். இதில், தான் நிரூப் மற்றும் வனிதா இடையே தற்போது பெரிய சண்டையே வெடித்துள்ளது.

வனிதா கெஞ்சல்

வனிதா கெஞ்சல்

வீட்டுக்கு அனுப்பிடுங்க பிக் பாஸ் என பிக் பாஸ் அல்டிமேட்டில் எப்படியும் இந்த வாரம் நம்மை அனுப்பிடுவாங்க என்பதை முன்னமே அறிந்து கொண்டு கெஞ்சுவது போல வனிதா விஜயகுமார் கெஞ்சியது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியே உங்களை வைத்துத் தான் ஓடிக்கிட்டு இருக்கு அதற்குள் அனுப்ப மாட்டார்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

தாமரையுடன் சண்டை

தாமரையுடன் சண்டை

தாமரை பேசுவது வீட்டிற்குள் எப்போதும் ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டிருப்பது போல இருப்பதாக வனிதா விஜயகுமார் பேசும் புரமோவை எல்லாம் ரசிகர்கள் ஜீரணிக்கவே முடியாமல் பார்த்து பிபி மாத்திரிகளை போட்டு வருகின்றனர். டெமனாக வனிதாவை தேர்வு செய்தது சரியான சாய்ஸ் தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

விளையாட சொல்லும் நிரூப்

விளையாட சொல்லும் நிரூப்

பாலாஜி அணி டெமனாகவும் நிரூப் அணி ஏஞ்சல்ஸாகவும் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை துவக்கி உள்ளனர். விரைவில் அப்படியே அவர்கள் ஏஞ்சலாகவும், இவர்கள் டெமனாகவும் மாறுவார்கள். விளையாடாமல் எப்படி விளையாடுவது என்கிற கேமை ஆடிவரும் வனிதாவை விளையாட சொல்லி நிரூப் கலாய்க்க வனிதாவுக்கு கோபம் கிளம்பியது.

பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல்

பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல்

இன்று மாலை 6 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந்த டெமன்ஸ் vs ஏஞ்சல்ஸ் டாஸ்க்கின் புதிய புரமோ ரசிகர்களுக்கு செம தீனியாக அமைந்துள்ளது. நிரூப் வனிதாவை இமிடேட் செய்வது போல வெறுப்பேற்ற பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன் என்றும் பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல் என்றும் கோபத்தின் உச்சிக்கே சென்று வனிதா விஜயகுமார் பேச பிக் பாஸ் வீடே பிரளயமாகி உள்ளது.

சமாதானம் செய்யும் தாமரை

சமாதானம் செய்யும் தாமரை

நிரூப்புக்கும் வனிதாவுக்கும் இடையே சூடு பறக்கும் சண்டை நடந்து கொண்டிருக்க நிரூப் கொஞ்சம் நிதானமாக பேசு என சண்டையை சமாதானம் செய்ய தாமரை பேசியதை பார்த்தும் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். வனிதா விஜயகுமார் இவரை பற்றி அப்படி பேசியும், இவர் நிரூப்பை அமைதி காக்க சொல்கிறாரே என தாமரைக்கு ஆதரவு பெருகி உள்ளது.

கமல் இல்லை

கமல் இல்லை

இந்த வாரம் இந்த பிரச்சனையை தட்டிக் கேட்க கமல்ஹாசனும் இல்லை என்பதால், யார் வந்தாலும் தனக்கு பெரிய கவலை இல்லை என்கிற தைரியத்தில் வனிதா விஜயகுமார் பேசி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க வந்ததும் வனிதாவை எவிக்ட் செய்து விடுவாரா? என்கிற யூகங்களும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X