சுப முகூர்த்தம்.. மணமேடையில் வனிதா விஜயகுமார்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?.. அடுத்த சம்பவம் லோடிங்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தின் சுப முகூர்த்தம் பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. தமிழ் சினிமாவில் விஜய் நடித்து வெளியான சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என கலக்கி வருகிறார். ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்த நிலையில், தனது மகள்களுக்காக வாழ்ந்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் பிரபலமான நிலையில், தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தின் சுபமுகூர்த்தம் பாடல் நாளை வெளியாகிறது.
மணக்கோலத்தில் வனிதா விஜயகுமார்: 3 முறை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார் அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா என்கிற கேள்விகளை கிளப்பும் வகையில் அவரது அடுத்த படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் உருவாகி வருகிறது. மணக்கோலத்தில் திருமண மேடையில் பட்டுச் சேலை அணிந்து வெட்கப்புன்னகையுடன் வத்திக்குச்சி வனிதா விஜயகுமார் உட்கார்ந்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
மாப்பிள்ளையை பாருங்க: தாடியை ட்ரிம் பண்ண டாக்ஸிக் பட யஷ் மாதிரி மணமகன் கோலத்தில் ஜம்முன்னு உட்கார்ந்திருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். ஏற்கனவே வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் காதலித்து பிரிந்த நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
சுப முகூர்த்தம்: வனிதா விஜயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரமேஷ் வைத்தியா இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவாகியுள்ள சுப முகூர்த்தம் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5.55 மணிக்கு வெளியாக உள்ளதாக சூப்பரான அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.
60ம் கல்யாணமா?: வனிதா விஜயகுமாரின் படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்கும் விதமாக வாழ்த்துக்கள் வனிதா அக்கா அடுத்த திருமணத்துக்கு ரெடியாகிட்டீங்க போல என்றும் 60ம் கல்யாணமா? என்றும் கலாய்த்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். ரீல் திருமணம் சீக்கிரமே ரியல் திருமணமாக வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











