Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷகீலாவுடன் செல்ஃபி.. குக் வித் கோமாளி புகழ் திருமண வரவேற்பில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த வனிதா!
சென்னை: குக் வித் கோமாளி புகழ் திருமண வரவேற்பில் வனிதா விஜயகுமார், ஷகீலா உள்ளிட்ட பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி குக் வித் கோமாளி புகழ் தனது காதலி பென்ஸியாவை விநாயகர் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே அவர் பென்ஸியாவை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சைகள் கிளம்பின.
சிறப்பாக நடந்து முடிந்த புகழ் -ரியா ரிசப்ஷன்.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு பாருங்க!
புகழ் விளக்கம்
தனது தந்தையின் விருப்பப்படி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதாகவும் தாயின் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் மனைவி பென்ஸியாவின் வீட்டார் விருப்பப்படியும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டேன். இனியும் யாராவது விருப்பப்பட்டால் மீண்டும் ஒரு முறை அவர்களுக்காக திருமணம் செய்து கொள்வேன் என புகழ் விளக்கமளித்து இருந்தார்.
திருமண வரவேற்பு
திருமணத்தில் நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட வெகு சிலரே கலந்து கொண்டனர். இந்நிலையில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை நடிகர்களை அழைத்து ஒரு மகா விருந்தே வைத்திருந்தார் புகழ். அந்த விருந்தில் நடிகை வனிதா விஜயகுமார், ஷகீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
வனிதா ஷகீலா செல்ஃபி
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒரு பக்கம் களைகட்ட நடிகை வனிதா விஜயகுமார் தனது குக் வித் கோமாளி டீம் தோழியான ஷகீலா உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
கேபிஒய் பாலா
வனிதா விஜயகுமார் கேபிஒய் பாலாவை தனது தம்பி மாதிரியே பார்த்து வருகிறார். அவருடன் தனியாகவும் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபி போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ளார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மகளையும் அழைத்துச் சென்றிருந்தார் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸுக்கு ஷகீலா வருவாரா
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்க உள்ள நிலையில், ஏகப்பட்ட குக் வித் கோமாளி பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. கடந்த சீசனிலேயே ஷகீலாவின் மகள் மிலா பங்கேற்க போகிறார் என வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்த சீசனுக்கு ஷகீலா போட்டியாளராக வர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும், வனிதா விஜயகுமாரும் வைல்டு கார்டு என்ட்ரியாக திரும்பவும் பழைய வத்திக்குச்சி வனிதாவாக வரணும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.