விஜய்யை எதிர்க்கும் பிக்பாஸ் ஜூலி.. வனிதா விஜயகுமார் இப்படி சொல்லிட்டாங்களே ப்பா

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் களமிறங்குகிறார். தோல்வி பயம் காரணமாகத்தான் அவர் இரண்டு தொகுதிகளில் களமிறங்குவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கிடையே இந்தத் தேர்தலில் விஜய்க்கு எதிராக தான் களமாடப்போவதாக அறிவித்திருந்தார் பிக்பாஸ் ஜூலி. இந்நிலையில் அவர் பற்றி வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை விஜய் தனித்து சந்திக்கிறார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என மொத்தம் இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். கட்சியின் முக்கிய தலைகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சென்னைக்குள் போட்டியிடுகிறார்கள். தனித்து களமிறங்கினாலும் விஜய் இரண்டு தொகுதிகளில் கால் வைத்திருப்பது அவரது தோல்வி பயத்தை காட்டுவதாகவே கருதப்படுகிறது. ஒரு தொகுதி கைவிட்டாலும் இன்னொரு தொகுதியிலும் வென்றுவிடலாம் என்ற பிளான்தான் அது.

Vanitha Vijayakumar Backs Julie Amid Vijay Criticism Sparks Fresh Controversy
Photo Credit:

விஜய் vs ஜூலி: இதற்கிடையே விஜய்க்கு எதிராக காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவருகிறார் பிக்பாஸ் ஜூலி. அண்மையில் நடந்த தவெக நிர்வாகிகல் சந்திப்பு கூட்டத்தின்போது, ஜல்லிக்கட்டு காளையை மையப்படுத்தி ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார். அந்த ஸ்டோரியை கேட்டுவிட்டு காண்டான ஜூலி; உடனடியாக அவரை விமர்சித்தும், கிண்டல் செய்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடனே தவெகவை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் ஜூலிக்கு எதிராக பதிவுகளை போட ஆரம்பித்தார்கள்.

Also Read
திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா.. ரம்யா கிருஷ்ணன் இப்படி சொல்லிருக்காரே.. இவ்வளவு விவரமா?
திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா.. ரம்யா கிருஷ்ணன் இப்படி சொல்லிருக்காரே.. இவ்வளவு விவரமா?

அடங்காத ஜூலி: அந்தப் பதிவுகளில் கிட்னி திருட்டில் ஜூலி ஈடுபட்டிருக்கிறார் என பேசினார்கள். அவர்க்ள் அப்படி செய்தது ஜூலியை மேற்கொண்டு ட்ரிகர் ஆக்கிவிட்டது. அதற்கும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து தரக்குறைவாகவே பேசிவந்தார்கள். இதனால் கடுப்பான ஜூலி சென்னை கமிஷனல் அலுவலகத்தில் புகாரும் கொடுத்தார். புகார் கொடுத்த கையோடு இன்னொரு வீடியோவையும் வெளியிட்டு விஜய்யையும், அவரது கட்சியினரையும் சரமாரியாக விமர்சனம் செய்திருந்தார். என்ன செய்தாலும் இப்படி பதிலடி கொடுக்கிறாரே என விழி பிதுங்கினார்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்.

வனிதா விஜயகுமார் பேட்டி: இந்நிலைய்ல் பிரபல நடிகையும், இயக்குநருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், "ஜூலி பிரசாரத்துக்கும் போகிறார். நீ எப்ப்டி விஜய்யை எதிர்க்கலாம் என்று அவரை கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. இது மாதிரி நிறைய பேர் செய்கிறார்கள். ஆனால் ஜூலி வேறு மாதிரி செய்கிறார். நான் ஒருவேளை தவெகவில் இருந்திருந்தால் நானும் தாக்கியிருப்பேன். இந்த விஷயத்தில் அவரை குறை சொல்லவோ, எதிர்க்கவோ முடியாது. இதில் ஏகப்பட்ட பணம் உள்ளே இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு அவர் பேசியிருக்கலாம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X