Vanitha Vijayakumar Net Worth: 43 வயசாகுது.. வனிதா விஜயகுமார் சம்பாதித்த சொத்து இத்தனை கோடியா?..

சென்னை: பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்த வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து தனித்து விடப்பட்ட நிலையில், தனி ஒருத்தியாக நடிகை வனிதா விஜயகுமார் சினிமா, சீரியல், பிக் பாஸ், யூடியூப் சேனல், பிசினஸ் என பல திறமைகளை காட்டி சும்மா வத்திக்குச்சியாகவே ஃபயராக உள்ளார்.

நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவுக்கு மகளாக 1980ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்த வனிதா விஜயகுமார் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற நிலையில், இளைய மகளுடன் பிறந்தநாளை வனிதா விஜயகுமார் கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமாரின் வாழ்க்கை, சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..

Vanitha Vijayakumar celebrates her 43rd birthday today and here we look out about her net worth

பெரிய இடத்துப் பெண்: பழம்பெரும் நடிகர் விஜய்குமார் மற்றும் மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். அருண் விஜய், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என சினிமா நடிகர்கள் அனைவருமே இவரது சகோதர சகோதரிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

குடும்பத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் திருமண வாழ்க்கையில் நடந்த விவாகரத்து பிரச்சனைகள் காரணமாக செல்வ செழிப்புடன் இருக்க வேண்டிய வனிதா விஜயகுமார் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டார்.

பிக் பாஸ் தந்த பிரபலம்: விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமாகி பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கை சீராக அமையாத நிலையில், ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்தார். கடைசியாக திருமணம் செய்த பீட்டர் பாலும் மோசடி பேர்வழி என்பதை அறிந்து அவரையும் பிரிந்த நிலையில், நோய் வாய் காரணமாக பீட்டர் பாலும் உயிரிழந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தந்த பிரபலம் காரணமாக மீண்டும் சின்னத்திரை, சினிமா என ஓட ஆரம்பித்த வனிதா விஜயகுமார் தனது மகள்களுக்காக பெரிதாக சம்பாதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு: மகள் ஜோவிகாவை நடிகையாக்கும் முயற்சியில் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள வனிதா விஜயகுமார் அடிக்கடி மலேசியா, தாய்லாந்து என வெளிநாடுகளுக்கு டூர் செல்லக் கூடிய நபர். சென்னையில் சொந்தமாக வனிதா விஜயகுமாருக்கு வீடு உள்ளது. துணிக்கடை, யூடியூப் சேனல் வருமானம், பிக் பாஸ் விமர்சகர், சின்னத்திரை, சினிமா நடிகையாக ஸ்பீடு காட்டி வரும் வனிதா விஜயகுமார் வசம் சுமார் 7.3 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X