இளையராஜா மகன் கார்த்திக் ராஜாவை காதலித்தாரா வனிதா விஜயகுமார்?.. அவரே என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: Mrs&Mr படத்தை இயக்கியிருக்கும் வனிதா விஜயகுமார்; இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள் என்று சொன்னது கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ராஜாவும் அவர் தரப்பும் இதுகுறித்து அமைதியாக இருக்கிறார்கள். அதேசமயம் இந்த விஷயத்தில் கார்த்திக் ராஜாவின் பெயரையும் ஒருதரப்பினர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் வனிதாவின் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா விஜயகுமார்; பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இயக்குநராகவும், நடிகையாகவும் வெல்ல முடியாத அவர் குடும்பத்திலும் பிரச்னைகளை சந்தித்தார். அதுமட்டுமின்றி மூன்று திருமணங்கள் செய்து; அவை செட் ஆகாததால் அந்த உறவிலிருந்து அதிரடியாக வெளியே வந்தவர். இதன் காரணமாகவே அவர் பல சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs&Mr திரைப்படம்: பிக்பாஸில் கலந்துகொண்டு அட்ராசிட்டி செய்த அவர்; வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு அநீதி, அந்தகன் ஆகிய படங்களில் நடித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகள் ஜோவிகாவை தயாரிப்பாளராக்கி Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருந்தார். மேலும் கிரண், ஷகிலா ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த 11அம் தேதி படம் வெளியானது.

தோல்வியும், பஞ்சாயத்தும்: சுமாரான வரவேற்பையாவது படம் பெற்றுவிடும் என்றே வனிதா எதிர்பார்த்திருந்தார். ஆனால் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க; மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த, 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார் வனிதா. ஆனால் முறையான அனுமதி வாங்கவில்லை என்று சொல்லி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வனிதா சொன்னது: இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் இளையராஜாவிடம் முன்பே கூறிவிட்டேன். சோனி நிறுவனத்திடம் நான் உரிமை பெற்றுவிட்டேன். நான் ராஜாவின் வீட்டில் ஒருத்தி. அந்த வீட்டுக்கு நான் மருமகளாக போயிருக்க வேண்டியவள். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது" என கூறினார். மேலும், அந்தக் குடும்பத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அந்தப் பையன் என்னிடம் வந்து, 'நீ என்னை லவ் பண்றியா இல்லை என் அப்பாவை லவ் பண்றியானு கேட்டான். நான் உடனே, 'உன் அப்பாவைத்தான் லவ் பண்றேன் என சொன்னேன்.
கார்த்திக் ராஜாவின் பெயர்: இதெல்லாம் நடந்தது. நான் என் அப்பாவையே நீதிமன்றத்தில் சந்தித்துவிட்டேன். இளையராஜாவை நான் எப்போதும் தெய்வமாகத்தான் மதிக்கிறேன்" எனவும் அதிரடி காட்டினார். வனிதாவின் இந்தப் பேச்சுக்களை அடுத்து இவ்விவகாரத்தில் இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் பெயரை சிலர் இழுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் வனிதாவின் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
வனிதாவின் ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் தெளிவுப்படுத்துகிறேன். கார்த்திக் ராஜா என்னுடைய நல்ல நண்பர். அவரது மனைவியும் எனக்கு நண்பர்தான். தயவு செய்து இந்த விஷயத்தில் கார்த்திக்கின் பெயரை கொண்டு வர வேண்டாம். இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. அவர்களது உறவினர் போல்தான் அந்தக் குடும்பம் என்னை நடத்துகிறது. சட்டப்பூர்வமாக சந்திப்பேன்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











