BB7: ஆத்தாடி அம்மாவையே மிஞ்சிடுவார் போல… நான் ரெடி.. நீங்க ரெடியானு கேட்ட ஜோவிகா விஜயகுமார்!

சென்னை: வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

விஜயகுமாரின் மகளான ஜோவிகா வனிதா விஜயகுமார் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவான ஒரு நபராக திகழ்ந்து வருகின்றார்.

Vanitha vijayakumar daughter jovika Vijayakumar bold speech in bigg boss grand opening

அவர் அன்னையோடு இணைந்து செய்யும் செயல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.

ஜோவிகா விஜயகுமார்: பிக் பாஸ் சீசன் 7ஐ உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை பிக் பாஸ்க்கு இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒன்பதாவது போட்டியாளராக நுழைந்து இருப்பவர் ஜோவிகா விஜயகுமார் என்ட்ரி கொடுத்தார். அவரை அன்போடு வரவேற்ற கமல், அவரின் ஏவியை ஒளிபரப்பினார்.

நடிகையாக ஆசை: அதில் பேசி இருந்த ஜோவிகா, எனக்கு படிப்பு சரியாக வரவில்லை, அம்மாவும் பல ஸ்கூலுக்கு மாற்றிவிட்டார். அப்போதும் எனக்கு படிப்பின் மீது ஈடுபாடு வரவில்லை. ஒரு நாள் அம்மா என்னிடம் பேசும் போது நான் நடிகையாக வேண்டும் என்று என் ஆசையை கூறினேன். என் குடும்பமே சினிமாவில் இருப்பதால் எனக்கும் அந்த ஆசைவந்துவிட்டது.

நான் ரெடி.. நீங்க ரெடியானு: அதுமட்டுமில்லாமல் என் அம்மா சிங்கிள் மதராக இருந்து அனைத்தையும் சமாளிக்கிறார். அவர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். இதையடுத்து, நான் ரெடி.. நீங்க ரெடியானு தனது அம்மா பாணியில் அலப்பறை கொடுத்தார். இதையடுத்து, கமல் ஜோவிகாவிடம் அம்மா எதாவது டிப்ஸ் கொடுத்தாங்களா என கேட்டார்.

டிப்ஸ் கொடுக்கல: இதற்கு பதில் அளித்த வனிதா, சார் நானே இரண்டு முறை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்து இருக்கிறேன். நான் என்ன டிப்ஸ் கொடுப்பது என்றார். மேலும், நடிகையாவதற்கு இதைவிட சரியான ஒரு மேடை கிடைக்காது, அது உங்களுக்கும் கிடைக்கவில்லை எனக்கும் கிடைக்க வில்லை. இந்த வயதில் என் மகளுக்கு கிடைத்து இருக்கிறது என்றார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X