அய்யய்யோ.. அலறிய வனிதா.. பிரதமர்.. முதல்வரிடம் புகார்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வரிடம் புகார் கூறியுள்ளார்.
நடிகை வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குற்றச்சாட்டுகள்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான, விவாகரத்தாகாத ஒரு நபரை திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானார். அடுத்தவரின் கணவரை திருடி விட்டார் என சரமாரியான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானார் வனிதா.

முகம் சுளிக்க வைத்தது
ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் எங்கள் குடும்ப பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தடாலடியாக பதில் அளித்து வாயை அடைத்தார். குறிப்பாக நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அவர் பேசிய பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

ஆதார் எண்
இந்நிலையில் சைபர் புல்லிங் குறித்து பேசிய நடிகை வனிதா, சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களின் ஆதார் எண்ணை லிங்க் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். அப்படி செய்தால்தான் சைபர் புல்லிங்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறி வருகிறார்.

சப்ஸ்க்ரைப்பர்கள்
இதனிடையே யூ டியூப் சேனல் நடத்தி வரும் வனிதா, புதுபுது ரெசிப்பிக்களை கூறி இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறார். தொடங்கிய சில நாட்களிலேயே 5 லட்சம் சப்ஸ்க்ரைப்பர்களை பெற்றார் வனிதா. இந்நிலையில் அவரது யூ டியூப் சேனலின் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு தெரியப்படுத்தினர்.

ஃபிராடு சேனல்கள்
இதனைப் பார்த்து பதறிய வனிதா, இதுபோன்று ஃபிராடு சேனல்களை யூ டியூப் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்கள் யார் வேண்டுமானாலும் சேனல் தொடங்கலாம் ஆப்ரேட் செய்யலாம் என அனுமதிக்கிறார்கள். அவர்களின் பின்னணி குறித்தெல்லாம் செக் செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.

கட்டாயமாக்க வேண்டும்
மேலும் யூ டியூப் சேனல் தொடங்க வாடிக்கையாளர் குறித்த தகவலுடன் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பதிவை @narendramodi, @PMOIndia, @CMOTamilNadu ஆகிய கணக்குகளையும் சேர்த்துள்ளார்.
Recommended Video

அந்த போட்டோவை வையுங்கள்
வனிதாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அச்சச்சோ இது என்ன ஆன்டிக்கு வந்த சோதனை என கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் அப்படியானால் முதலில் நீங்கள் ஆதாரில் உள்ள போட்டோவை வையுங்கள் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











