அடேங்கப்பா.. அந்த சீரியலிலா? சீனியர் நடிகையுடன் சேர்ந்து மிரட்டப் போகும் நடிகை வனிதா விஜயகுமார்!

சென்னை: சன் டிவி, விஜய் டிவி என கலக்கி வரும் நடிகை வனிதா விஜயகுமார், அடுத்ததாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இணைந்தார்கள்.

தன் வாழ்வை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும், போராட்டங்களும் தொடர்ந்து வந்தாலும் அதனை துணிச்சலாக எதிர்கொண்டு வருகிறார் வனிதா விஜயகுமார்.

வத்திக்குச்சி வனிதா

வத்திக்குச்சி வனிதா

பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட்டான சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் தான். அதிலும், வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு மிரட்டியது வேற லெவலில் ரசிகர்களை ஈர்த்தது. வத்திக்குச்சி வனிதா என்றே அவருக்கு பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள். சமீபத்தில் முடிவடைந்த 4வது சீசனில் வீடியோ கால் மூலம் போட்டியாளர்களை சந்தித்தார்.

சன் டிவி, விஜய் டிவி

சன் டிவி, விஜய் டிவி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். தொடர்ந்து, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக அமர்ந்தார்.

3வது திருமணமும் செட்டாகல

3வது திருமணமும் செட்டாகல

இரண்டு முறை கல்யாணம் ஆகியும் திருமண உறவு அவருக்கு சரியாக அமையவில்லை. தனியாக யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரும் குடிகாரர் என்றும், அவரது உடல் நலம் சரியாக இல்லை என்றும் சொல்லி அவரையும் பிரிந்து விட்டார்.

ஜீ தமிழ் சீரியலில்

ஜீ தமிழ் சீரியலில்

இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான திருமதி ஹிட்லர் சீரியலில் கெஸ்ட் ரோலில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், அந்த சீரியலில் நடித்து வரும் சீனியர் நடிகையான அம்பிகாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

அர்ச்சனாவுக்கு பதிலா

அர்ச்சனாவுக்கு பதிலா

ஜீ தமிழில் இருந்து அர்ச்சனா விஜய் டிவிக்கு வந்து செட்டில் ஆகி உள்ள நிலையில், விஜய் டிவியில் இருந்து வனிதா விஜயகுமார் ஜீ தமிழுக்கு போயிட்டாங்களா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் அமீத் பார்கவ் நடிக்கும் திருமதி ஹிட்லர் சீரியல் நடிகர்களுடன் எடுத்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

சினிமாவிலும்

சினிமாவிலும்

இதுமட்டுமின்றி அறிமுக இயக்குநர் ஆதம் தாசன் இயக்கத்தில் உருவாகும் அனல் காற்று திரைப்படத்தில், வனிதா விஜயகுமார் லீடு ரோலில் நடித்து வருகிறார். அவருடன் நகைச்சுவை நடிகர் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிமா, சீரியல் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X