சமந்தாவுக்கு போட்டியாக குத்தாட்டம் போட களமிறங்கிய வனிதா விஜயகுமார்.. எந்த படத்தில் தெரியுமா?

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட ரெடியாகி விட்டேன் என ஷேர் செய்துள்ள புகைப்படம் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ, பிசினஸ் என பன்முகத் திறமைகளை காட்டி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.

மீண்டும் ஐட்டம் நம்பர்

மீண்டும் ஐட்டம் நம்பர்

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு முன்பிருந்தே ஐட்டம் நம்பர் பாடல் அதிகளவில் இடம்பெற்று இருந்தன. அதற்காகவே சில நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வந்தனர். ஆனால், சமீப காலமாக சினிமாவில் பாடல்களே குறைந்து வரும் நிலையில், ஐட்டம் நம்பர் பாடல்கள் காணமல் போய் இருந்த நிலையில், தற்போது மீண்டும் புஷ்பா படம் மூலம் ஐட்டம் நம்பர் பாடல் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்துள்ளது.

வனிதாவின் குத்தாட்டம்

வனிதாவின் குத்தாட்டம்

சினிமா, சீரியல் மீண்டும் சினிமா என டைம் லூப் போல நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் போட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மஞ்சக்காட்டு மைனா

மஞ்சக்காட்டு மைனா

மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் கண்களில் வித்தியாசமான ஐலேஷ் மேக்கப் போட்டுக் கொண்டு மஞ்சக்காட்டு மைனாவாக மாறி உள்ளார். ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாகப் போகிறேன் என வனிதா விஜயகுமார் அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் லைக்குகளையும் ஹார்ட்டீன்களையும் குவித்து வருகின்றனர்.

எந்த படத்தில்

எந்த படத்தில்

நடிகர் பிரசாந்தின் அந்தகன், பவர்ஸ்டார் சீனிவாசன் உடன் ஒரு படம், நடமாடும் தங்க நகைக்கடை ஹரி நாடார் உடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களில் பிசியாகி உள்ள நடிகை வனிதா விஜயகுமார் 'காத்து' எனும் டைட்டிலில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் இப்படியொரு குத்தாட்டம் போடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன் உடன் மோதல்

ரம்யா கிருஷ்ணன் உடன் மோதல்

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வனிதா விஜயகுமாரை ரம்யா கிருஷ்ணன் குறைவான மதிப்பெண்கள் கொடுத்து அசிங்கப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. விஜய் டிவியில் இருந்தே தான் வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வனிதா விஜயகுமார் வெளியிட்டார்.

சமந்தாவுக்கு போட்டி

சமந்தாவுக்கு போட்டி

இந்நிலையில், தற்போது நடிகை சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக குத்தாட்டம் போட களமிறங்கி விட்டார் வனிதா அக்கா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து அவருக்கு உற்சாகம் அளித்து வருகின்றனர். விரைவில் வனிதா விஜயகுமாரின் அட்டகாச ஆட்டத்தை ரசிகர்கள் காண போகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X