ஜோவிகாவின் அப்பா யார் தெரியுமா? தப்பான கமெண்ட்.. மேடையில் கண்கலங்கிய வனிதா விஜயகுமார்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனர் அவரது மகள் ஜோவிகா தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இதில், ராபர்ட் மாஸ்டர், ஸ்ரீமன், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா பாபு, கிரண், ஆர்த்தி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நேற்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை வனிதா மேடையில் கண்கலங்கி பேசினார்.

அதில், என் மகள் ஜோவிகா பிக்பாஸில் இருந்த போது, எதற்கு அவருடைய பெயர் ஜோவிகா விஜயகுமார் என இருக்கிறது என்று பலவிதமான கமெண்ட்கள் வந்தன. அந்த கமெண்ட்களை நான் மதிக்க மாட்டேன் என்றாலும், அதில் என்னென்ன கமெண்டுகள் வருகிறது என்பதை படிப்பேன். அந்த கமெண்ட்களுக்கு எல்லாம் இந்த மேடையில் பதில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய பெயர் வனிதா விஜயகுமார் திருமணம் ஆன பிறகும், நான் அதே பெயரோடு தான் இருந்தேன். நான் என் பெயரை மாற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கு மாற்றவும் தோன்றவில்லை.

Mrs amp amp Mr Vanitha Vijayakumar speech

வனிதா பேச்சு: எனக்கு திருமணமாகி ஸ்ரீஹரி பிறந்து மூன்று வருடங்கள் கழித்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். அந்தப் பிரச்சனையால் என்னால் சென்னையில் இருக்க முடியவில்லை, எங்கேயும் இருக்க முடியவில்லை. அது என்னை பிரச்சனை, அதற்கு காரணம் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர் என் குழந்தைகளின் தந்தை. அவரைப் பற்றி நான் தவறாக எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால், நான் அனுபவித்த பிரச்சனை எனக்கு மட்டும் தான் தெரியும். அப்போது, நான் கர்ப்பமாக இருந்ததால் என்னுடைய அப்பா அந்த குழந்தையை நான் நன்றாக பெத்து எடுக்க வேண்டும் என்பதற்காக என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்.

அழுத வனிதா: ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவளுக்கு முக்கியமான அரவணை தேவை, அதுவும் கணவரின் அரவணைப்பு தேவை. ஆனால், நான் அமெரிக்காவில் யாருமே இல்லாமல் நான் என் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடைய மகன் ஸ்ரீஹரி, அம்மாவுடன் இருந்தேன். அப்போதுதான் ஜோவிகா பிறந்தாள், அமெரிக்காவில் குழந்தை பிறந்த உடனே அந்த குழந்தையின் பெயரை பதிவு செய்து விடுவார்கள். அது அங்கு இருக்கும் முறை. அதனால் குழந்தையின் பெயர் என்னவென்று கேட்டார்கள் அந்த நேரத்தில் என்னுடைய மனதில் தோன்றியது ஜோவிகா விஜயகுமார். ஏனென்றால், அந்த குழந்தையை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்தவர் என்னுடைய அப்பா, அதற்காக என்னுடைய மகளுக்கும் என் தந்தையின் பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஜோவிகாவின் அப்பா ஆகாஷ் தான். கரீனா கபூர், அபிஷேகம் பச்சனுடைய குழந்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, ஜோவிகாவையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த குழந்தை தயாரித்த படத்தை நான் இயக்கி நடித்து இருக்கிறேன். படத்தை பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்று வனிதா கண்கலங்கி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X