வாழ்க்கையில் பொறுமை ரொம்ப அவசியம்.. மேடையில் உருக்கமாக பேசிய வனிதா விஜயகுமார்!
சென்னை: அறிமுக இயக்குநர் சுகன் இயக்கத்தில் உருவாக உள்ள பிதா படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய வனிதா விஜயகுமார், இன்றைய இளைஞர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஜெயிக்க வேண்டும் என்றால், வாழ்க்கையில் பொறுமை ரொம்ப அவசியம் என்றார்.
இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் பிதா. எட்டு குறும்படங்களை இயக்கியுள்ள சுகன், கலா மாஸ்டரிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உளவுத்துறை, ஜனனம், கலவரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி துணை இணை- இயக்குனராக பணியாற்றிய சுகன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

பிதா திரைப்படம்: இப்படத்தில்,அனு, ஆதேஷ் பாலா முதன்மை கதாபாத்திரத்திரத்திலும், அருள்மணி,நடிகர் சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விச்சூச்ர் எஸ் சங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு நரேஷ் இசையமைக்க, ஒளிப்பதிவு பணியை இளையராஜா மேற்கொள்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய வனிதா விஜயகுமார்.
தனிப்பட்ட வாழ்க்கை: இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தேடல் இருக்கும். அது தனிப்பட்ட வாழ்க்கை, ப்ரெபஷனல்னு இரண்டு விதமாக வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும். அதில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம், பெண்கள் குறிப்பாக அதிகமாக கொடுப்போம். கடைசியில் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்போம்,என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான். இன்று நான் சந்தோஷமா இருக்க காரணம், நான் நடித்த இரண்டு படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது.
பொறுமை அவசியம்: அது மட்டுமில்லாமல் பிதா படத்தோடு நான் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதை மற்றொரு படத்தின் ஆரம்பாக நான் கருதுகிறேன். இதை நான் இந்த இடத்தில் சொல்வதற்கு காரணம் பெருமைக்காக இல்ல, பொறுமைக்காக சொல்கிறேன். எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை ஆகியவற்றை தாண்டி வெற்றி இருக்கிறது. நம்பிக்கையோடு விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள், சினிமா என்பது சாதாரணமானது கிடையாது பொறுமை வேண்டும் என்பது போகப் போக தான் தெரியும் என்று அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசினார். இந்த நிகழ்ச்சியில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமார், ஷ்ரதா ராவ், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர்கள் சரண், சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











