உங்களை பார்த்தால் பயம்.. மிரட்டிட்டிங்களே.. வனிதா விஜயகுமாரிடம் ரஜினி இப்படி பேசிருக்காரே ப்பா
சென்னை: விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் Mrs&Mr. அதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வனிதா இயக்கியிருக்கும் திரைப்படம் என்பதால் ஓரளவுக்கு எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. தற்போது படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் வனிதா ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகுமாரின் மகள் வனிதா என்றாலே சண்டை, சர்ச்சைதான் என்ற நிலை நீடித்தது. அவரது திருமண வாழ்க்கை, குடும்பம் என அத்தனையுமே பிரச்னைக்குள் இருந்தது. இருப்பினும் வனிதா அதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தனது பாதையில் மட்டும் பெரிய கவனத்தை செலுத்திவந்தார். ஒருசில படங்களில் நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்கொண்டு ஃபேமஸ் ஆனார்.
இரண்டாவது இன்னிங்ஸில் வனிதா: அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அதன்படி வசந்தபாலன் இயக்கிய அநீதி திரைப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். தொடர்ந்து பிரசாந்த்தை வைத்து அவரது தந்தை இயக்கிய அந்தகன் படத்திலும் நடித்திருந்தார். இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அவதாரம்: நடிகையாக மட்டும் இத்தனை நாட்கள் இருந்த அவர் இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், கிரண் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஜோவிகாதான் தயாரித்திருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. வனிதா விஜயகுமார் இயக்குநர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவின் பேட்டி: இந்தப் படத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த்தை வனிதாவும், ஜோவிகாவும் சமீபத்தில் சந்தித்தார்கள். இந்நிலையில் அந்த சந்திப்பு குறித்து சமீபத்தி பேட்டி ஒன்றில் பேசிய வனிதா, "ரஜினியை நான் நேரில் சந்தித்தது சிறப்பான அனுபவம். எங்களை முதலில் பார்த்ததும் படத்துக்கு செய்த செலவை தெரிந்துகொண்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டார். அதுமட்டுமின்றி எங்களிடம் செம ஜாலியாகவும் பேசிக்கொண்டிருந்தார்.
உங்களை பார்த்தால் பயம்: பேசிக்கொண்டிருந்தபோது எல்லோரையும் நீங்கள் மிரட்டிவிட்டீர்கள். உங்களை பார்த்தாலே எல்லோரும் பயப்படுகிறார்கள். உங்களை நினைத்து ரொம்பவே பெருமைப்படுகிறேன் என்று சொன்னார். கபாலி பட ரிலீஸின்போது ரஜினியுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு இப்போதுதான் அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நிறைய விஷயங்களை பேசினோம்: குடும்பம் சார்ந்து, தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து என பல விஷயங்களை பேசினோம். என்னுடைய குழந்தைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். என்னுடைய மகள் நடிக்கவிருக்கும் படத்தின் விவரங்களையும் கேட்டார். ஒருவர் மீது அக்கறை வைத்துவிட்டால் அவர்களை உன்னிப்பாக கவனிக்கும் தன்மை ரஜினிக்கு இருக்கிறது. நமக்கே தெரியாமல் நம்மை கவனிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











