ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸையும் இரிடேட் பண்ணும் வனிதா விஜயகுமார்.. இந்த வாரம் தாக்குப்பிடிப்பாரா?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் அடக்கம் மற்றும் அமைதியின் முழு உருவமாக தென்பட்ட வனிதா விஜயகுமார் உள்ளே நுழைந்ததும் பிக் பாஸ் குழு எதிர்பார்த்தது போலவே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

முதல்வார கேப்டன் ஷாரிக் முதல் பாலாஜி முருகதாஸ் வரை அத்தனை போட்டியாளர்களையும் இரிடேட் செய்வது போல வனிதா விஜயகுமார் சோபாவில் அமர்ந்து கொண்டு ஆர்டர் போடுவது எந்தவொரு ஹவுஸ்மேட்டுக்கும் பிடிக்கவில்லை.

அதே போல கடைசியாக மற்ற ஹவுஸ்மேட்களை பழிவாங்கும் நடவடிக்கையிலும் இறங்கி தனது கேமை ஆடுகிறார்.

அதுவேணும் இதுவேணும்

அதுவேணும் இதுவேணும்

பிக் பாஸ் வீட்டுக்கு பதிலாக வனிதா விஜயகுமாரை சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் திட்டும் அளவுக்கு பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே அது வேண்டும் இது வேண்டும் என பிக் பாஸிடமும் மற்ற ஹவுஸ்மேட்களிடமும் ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

ராங்கித்தனம்

ராங்கித்தனம்

பிக் பாஸ் அல்டிமேட்டின் துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் எம்பவர்மென்ட் எல்லாம் கமல் சாரே சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்கும் அளவுக்கு கதையளந்த வனிதா விஜயகுமார் மீண்டும் தனது ராங்கித்தனத்தை ஆரம்பித்து விட்டார். இதுக்குத்தானே உங்களை சூஸ் பண்ணினோம் என பிக் பாஸ் குழுவும் செம ஹேப்பியாக உள்ளது.

டென்ஷனான ஷாரிக்

டென்ஷனான ஷாரிக்

முதல் வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாரிக்கை ரொம்பவே டென்ஷன் படுத்தி உள்ளார் வனிதா விஜயகுமார். காபி வேண்டும் என அடம்பிடிக்கும் வனிதாவுக்காக கேமரா முன்னாடி நின்று பேசும் ஷாரிக் காபி கொடுத்து முதல்ல அவங்கள வெளிய அனுப்புங்க என்றே அப்செட் ஆகி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாலா வரை

பாலா வரை

கேப்டன் ஷாரிக், அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் என யார் பேசினாலும் எதிர் கவுன்ட்டர் கொடுத்து அவர்களை ஆஃப் செய்யும் விதமாக பேசி வருகிறார் வனிதா விஜயகுமார். ஆரம்பமே இப்படி இருந்தால் இவருடன் 70 நாட்கள் எப்படி குப்பைக் கொட்டுவது என நினைத்துத் தான் 6 பேர் ஓட்டுப் போட்டு இவரை வெளியேற்ற நாமினேட் செய்துள்ளனர்.

டீ தூள் ஒளித்து வைப்பு

டீ தூள் ஒளித்து வைப்பு

தனக்கு காபி வராத வரை இந்த வீட்டில் இருக்கும் யாரும் டீ குடிக்கக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த டீ தூள் பேக்கெட்களையும் தனது பெட்டுக்கு அடியில் ஒளித்து வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இன்னும் என்னவெல்லாம் இம்சையை இந்த இம்சை அரசி தரப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Recommended Video

Bigg Boss ultimate Day 2: காதல் கதையை Bigg Bossல் சொல்லிய Niroop abhirami | Abhi Niroop Love Story
குறைவான ஓட்டுக்கள்

குறைவான ஓட்டுக்கள்

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்கு வருவதை எண்ணி சந்தோஷப்பட்ட அதே ரசிகர்கள் தான் தற்போது வனிதாவின் அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்கு ஓட்டுக்களை போடுவதே இல்லை. குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார் வனிதா விஜயகுமார். ஆனால், அவ்வளவு எளிதாக அவர் சீக்கிரம் வெளியேற மாட்டார் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X