Bigg Boss 7 - நான் டிப்ஸ் சொல்லியா ஜோவிகா ஜெயிப்பா?.. பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் ரகளை பேச்சு

சென்னை: Bigg Boss 7 Vanitha Vijayakumar (பிக்பாஸ் 7 வனிதா விஜயகுமார்) பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் தனது மகள் குறித்து பேசியது பலரையும் கவர்ந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், மணிச்சந்திரா, ஜோவிகா, வினுஷா, ஐஷு, பவா செல்லதுரை என மொத்தம் 18 பேர் பிக்பாஸ் போட்டியில் கோதாவில் குதித்திருக்கின்றனர். கடந்த சீசன் போலவே இந்த சீசனிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Vanitha Vijayakumar Funny Speech in Bigg Boss 7 Grand Opening

உள்ளே சென்ற போட்டியாளர்கள்: பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் சென்றார். அவரைத் தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், மணிச்சந்திரா, ஜோவிகா, வினுஷா, ஐஷு உள்ளிட்டோர் வீட்டுக்குள் சென்றனர். கேப்டன் பதவி முதலில் கூல் சுரேஷுக்கு கொடுக்கப்பட அடுத்தடுத்து கைமாறியது.

ஜோவிகா: இந்த சீசனில் இருக்கும் ஹைலைட் போட்டியாளர்களில் ஒருவர்தான் ஜோவிகா விஜயகுமார். இவர் வனிதா விஜயகுமாரின் மகள். வனிதா ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வனிதாவின் மகளும் வனிதா போலவே பல பஞ்சாயத்துக்களை கூட்டுவாரா என ரசிகர்கள் இப்போதே கமெண்ட்ஸ்களில் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

ஜாலியான ஆள்: ஆனால் ஜோவிகா பேசுகையில், நான் ரொம்பவே ஜாலியான ஆள். எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். அவர் பேசி முடித்த பிறகு கமல் ஹாசன் ஜோவிகாவிடம், நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் உங்கள் அம்மா ஏதாவது டிப்ஸ் கொடுத்தார்களா என கேட்க பெரிதாக ஒன்றும் டிப்ஸ் கொடுக்கவில்லை சார் என்றார் ஜோவிகா.

நான் டிப்ஸ் கொடுத்தா ஜெயிப்பா: அதனையடுத்து நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் கமல் ஹாசன் நீங்கள் எதுவும் டிப்ஸ் கொடுத்தீர்களா என்று கேட்டார். அப்போது பேசிய வனிதா, "சார் நான் டிப்ஸ் கொடுத்தா அவள் ஜெயிக்கப்போறா. நானே நிறைய தடவை வீட்டுக்குள் போவதும் வருவதுமாக இருந்தேன். அவளிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன். யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே. மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேள் என சொன்னேன்.

என் அம்மா: அவள் ரொம்பவே தைரியமான ஆள். அன்புக்காக கடுமையாக போராடுவாள்.வீட்டை அவ்வளவு அழகாக நிர்வகிப்பாள். நான் என் அம்மாவைத்தான் உள்ளே அனுப்புகிறேன். சினிமா எல்லாம் வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் மீறிதான் இங்கு வந்திருக்கிறாள். பிக்பாஸ், சினிமா எல்லாத்தையும் தாண்டி உங்கள் அருகில் நிற்கும் பாக்கியம் அவளுக்கு கிடைத்திருக்கிறது. அவளுடைய ஃபர்ஸ்ட் ஃப்ரேம் இது. அதில் உங்களுடன் நிற்கிறாள். எத்தனை ஹீரோயின்களுக்கு இது கிடைக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X