வந்தோமா.. டாஸ்க் கொடுத்தோமா.. போனோமான்னு இருந்த வனிதா அக்கா.. பாலா பக்கம் திரும்பவே இல்லையே?

சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களால் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் இல்லை. ஆனால், அதனை சரி கட்ட ஏகப்பட்ட கொண்டாட்டங்களை பிக் பாஸ் குழு வடிவமைத்து வருகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான மகத், ஷெரின், விஜயலக்‌ஷ்மி, வனிதா விஜயகுமார், சாண்டி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் வீடியோ கால் மூலமாக கலந்து கொண்டனர்.

வனிதா விஜயகுமார் ஆஜீத் மற்றும் கேபிக்கு விளையாட டாஸ்க் கொடுத்தார்.

வத்திக்குச்சி வனிதா

வத்திக்குச்சி வனிதா

பிக் பாஸ் ரசிகர்களால் பெரிதும் மறக்க முடியாத சீசனாக பிக் பாஸ் 3 இருக்கிறது. அதில், வத்திக்குச்சி என பெயரெடுத்த வனிதா விஜயகுமார் ஷோவில் சண்டைக்கு பஞ்சமே வைக்காத வகையிலும், போட்டியாளர்களை அலற விடுவதிலும் செம மாஸ் காட்டினார். இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வீடியோ கால் மூலம் ஷாக்கிங் என்ட்ரி கொடுத்தார்.

கருப்பு நிற சேலையில்

கருப்பு நிற சேலையில்

கருப்பு நிற சேலை, கருப்பு ஜாக்கெட், கருப்பு நிற பொட்டு என கலக்கலாக வனிதா விஜயகுமார் திரையில் தோன்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும், நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க, ஏகப்பட்ட பண்டிகைகளும் பரிசுகளும் காத்திருக்கின்றன என்றார்.

நேரடியாக டாஸ்க்

நேரடியாக டாஸ்க்

எல்லோருக்கும் பொதுவா ஒரு வாழ்த்தை போட்டு விட்டு, நேரடியாக வந்த வேலைக்கு இறங்கிவிட்டார் வனிதா விஜயகுமார். கேபி மற்றும் ஆஜித்தை கூப்பிட்டு, ஜெம்ஸ் மிட்டாய்களை, ஸ்ட்ராவில் உறிந்து பக்கத்து பவுலில் நிற்க வைக்கப்பட்டு இருக்கும் மூன்று ஸ்ட்ராக்களின் மேலே வைக்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கேபியும், ஆஜீத்தும் அதனை புரிந்து கொண்டு களத்தில் இறங்கினர்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு டாஸ்க் கொடுத்தாலும், சொதப்பி வரும் கேபி, இந்த டாஸ்க் பற்றி வனிதா விஜயகுமார் விவரிக்கும் முன்னமே, ஆம் தெரியும் தெரியும், நான் சூப்பரா பண்ணிடுவேன் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தார். ஆனால், ஒரு ஜெம்ஸ் மிட்டாயை கூட அவர் ஸ்ட்ராவின் மேலே வைக்க வில்லை.

இப்படியொரு திறமையா

இப்படியொரு திறமையா

ஏற்கனவே பிக் பாஸ் டாஸ்க்கை எல்லாம் பார்த்தால், எலிமன்ட்ரி ஸ்கூல் பிள்ளைங்களுக்கு கொடுக்கும் டாஸ்க் போல இருக்கு என கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், ஜெம்ஸ் மிட்டாயை அதுவும் சுட்டிக் குழந்தைகளுக்கு கொடுத்து மீண்டும் நிரூபித்து விட்டனர். கேபி ஆரம்பிக்கும் முன்னமே ஆஜீத் அசால்ட்டாக எல்லாத்தையும் அடுக்கி வைத்து அசத்தி விட்டார்.

ரொம்ப மிஸ் பண்றேன் ரம்யா

ரொம்ப மிஸ் பண்றேன் ரம்யா

போன சீசன் குக் வித் கோமாளி மற்றும் கலக்கப் போவது யாரு என எல்லா விஜய் டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட நடிகை ரம்யா பாண்டியனை பார்த்து பேசிய வனிதா விஜயகுமார், கலக்கப் போவது யாரு செட்ல உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன் என்றார். பதிலுக்கு, நானும் மிஸ் பண்றேன் என வழக்கமான தனது க்யூட் ஸ்மைல் மூலம் பதில் சொல்லி, கிளம்புங்க என்பது போல பை சொல்லி அனுப்பி விட்டார்.

பாலா பக்கம் திரும்பவே இல்லை

பாலா பக்கம் திரும்பவே இல்லை

பிக் பாஸ் போட்டியாளர்களை வீடியோ கால் மூலம் பார்த்து பேசிய வனிதா விஜயகுமார், தனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்து விட்டு கிளம்பி விட்டார். ‘அட்ஜெஸ்ட்மென்ட்' சர்ச்சை குறித்து வாயே திறக்கவில்லை. அவ்வளவு ஏன் பாலாவுக்கு ஒரு ஹாய் கூட சொல்ல, அந்த பக்கமே தலை வச்சு படுக்காமல் எஸ்கேப் ஆகிட்டார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X