பவர் ஸ்டாரின் கன்னத்தை பிடித்து உம்மா கொடுக்க வரும் வனிதா விஜயகுமார்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனின் கன்னத்தை பிடித்து உம்மா கொடுப்பது போல வனிதா விஜயகுமார் கொடுத்துள்ள போஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் வனிதாவின் போஸ்ட்டுக்கு கீழ் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ஆள் அடையாளமே தெரியாதது போல மாறி உள்ளார்.
வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்த நிலையில், அந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

பவர் ஸ்டார் சீனிவாசன்
லத்திகா திரைப்படத்தின் மூலம் தொழிலதிபரான பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமாவில் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து ஷங்கரின் ஐ உள்ளிட்ட பல படங்களில் தலை காட்டி இருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

வனிதாவுடன் இணைந்து
பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த நிலையில், கடைசியாக வனிதா விஜயகுமாருடன் பிக்கப் டிராப் படத்தில் இணைந்திருந்தார். ஆனால், திடீரென அவரது உடல் நலம் குறைய நேரிட்ட நிலையில், அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

முத்தம் கொடுப்பதை போல
பவர் ஸ்டார் சீனிவாசன் சமீப காலமாக ஓய்வில் இருந்து வந்த நிலையில், திடீரென வனிதா விஜயகுமாரின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். அதிலும், அந்த புகைப்படத்தில் வனிதா விஜயகுமார் தனது வாயை குவித்துக் கொண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கலாய்க்கும் ரசிகர்கள்
வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் விரைவில் பேட்டி எடுக்கப் போவதாக அறிவித்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாவம் அவரை விட்டுடுங்க
வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனின் கன்னத்தை பிடித்து கிஸ் அடிக்கப் போவது போல போட்டோவை போட்டிருக்கும் நிலையில், பாவம் அவரை விட்டுடுங்க வனிதா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

சோனமுத்தா நீயும் சிக்கிட்டியா
அய்யய்யோ சோனமுத்தா நீயும் சிக்கிட்டியா என வனிதா விஜயகுமார் உடன் படு நெருக்கமாக பவர் ஸ்டார் சீனிவாசன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் விளாசி எடுத்து வருகின்றனர். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











