வட இந்திய பைலட்டுடன் 4வது திருமணம் செய்தாரா வனிதா விஜயகுமார்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் வட இந்தியாவை சேர்ந்த பைலட்டை நான்காவதாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
பின்னர் பருவ வயதில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை.

இரண்டு திருமணங்கள்
இதனை தொடர்ந்து 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளை பெற்றார். பின்னர் அவரை விவாகரத்து செய்த வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார்.

நடன இயக்குநர்
அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்ற வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட்டுன் டேட்டிங்கில் இருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அடிக்கடி செய்திகள்
மூத்த மகன் ஸ்ரீஹரி தனது அப்பாவுடன் வசித்து வர இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார் நடிகை வனிதா. குடும்பத்தாருடன் ஏற்படும் தகராறு காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வரும் வனிதா, கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

திருமண பத்திரிக்கை
இதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார். தொடர்ந்து யூட்யூப் சேனல் தொடங்கினார் வனிதா. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனிதா.

40 வயதில் திருமணம்
வயதுக்கு வந்த மகள் இருக்கையில் 40 வயதில் மூன்றாவது திருமணம் தேவையான என விமர்சனங்கள் எழுந்தன. பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத், தனது கணவரை வனிதா அபகரித்துக் கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

பீட்டர் பாலை பிரிந்தார்
இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேசு பொருளானது. ஆனால் அந்த திருமணமும் நீடிக்கவில்லை. அடுத்த 4 மாதங்களிலேயே பீட்டர் பால் பெரும் குடிக்காரர் என வீட்டை விட்டு விரட்டியடித்தார் வனிதா. மேலும் இருவரும் பிரிந்துவிட்டதாக வீடியோவும் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சினிமாவில் பிஸி
தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த வனிதா, படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனல் காற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.

நான்காவது திருமணம்
மேலும் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

மீண்டும் காதல் திருமணம்
பீட்டர் பாலை பிரிந்த பிறகு வனிதாவுக்கு வட இந்தியாவை சேர்ந்த விமான பைலட் ஒருவருடன் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கழுத்தில் கறுப்பு மணி
வனிதா கொல்கத்தா சென்ற போது அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. வனிதா கழுத்தில் அணிந்திருக்கும் கறுப்பு மணிக்கூட அவர் நான்காவது கணவர் தங்களின் குடும்ப முறைப்படி அணிவித்ததுதான் என்றும் வனிதாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்தை மறைப்பது ஏன்?
மேலும் வனிதா சமீபத்தில் மாலத்தீவு சென்றதும் தனது காதல் கணவருடன் தான் என்றும் தகவல் பரவி வருகின்றனர். ஆனால் வனிதா தனது திருமணம் குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. இந்நிலையில் வனிதாவின் 4வது திருமணம் குறித்து அறிந்த ரசிகர்கள் வனிதா தனது திருமணத்தை மறைப்பது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











