பாக்கத்தான் நான் அப்படி.. எனக்கு இப்படி ஒரு நோய் இருக்கு.. ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் அரியவகை நோய் குறித்து முதன் முறையாக தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்: திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், மீண்டும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் யாருக்கும் பயப்படாமல் பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
பிஸ்னஸ் உமன்: அதுமட்டுமில்லாமல், யூடியூப் சேனல் மற்றும் சொந்தமாக துணி கடை, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி பிஸ்னஸ் உமனாகவும் வலம் வருகிறார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் அரியவகை நோய் குறித்து வெளிப்படையாக கூறி உள்ளார்.

எனக்கு இப்படி ஒரு நோய் இருக்கு: அதில், தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா என்கிற நோய் பாதிப்பு பல வருடங்களாகவே இருக்கிறது. இதனால், என்னால் சிறிய இடங்களிலோ, பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களில் அதிக நேரம் இருந்தால் எனக்குள் ஒரு பயம் வந்துவிடும்.இது நோய் குறித்து தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த தெரியும் என வனிதா கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது சாதாரண விஷயம் தான், இது ஒன்ணும் நோய் இல்லை என ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஜோவிகா விஜயகுமார்: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா எப்படி பிரபலமானாரோ அதே போல, தற்போது ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகி போல செம க்யூட்டாக இருக்கும் ஜோவிகாவிற்கு இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல, விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி பிக்பாஸ் வீட்டிற்கு வர இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











