Vanitha Vijayakumar - உலகத்திலேயே நான் மட்டும்தான் நேர்மையான ஆள்.. வனிதா விஜயகுமார் போட்ட ட்வீட்

சென்னை: Vanitha VIjayakumar (வனிதா விஜயகுமார்) உலகத்திலேயே நான் மட்டும்தான் நேர்மையான ஆள் என வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் 18 பேர் வீட்டுக்குள் நுழைய அடுத்ததாக வைல்டு கார்ட் எண்ட்ரி மூலம் ஐந்து பேர் வீட்டுக்குள் சென்றனர். மொத்தம் 23 பேரில் பவா செல்லதுரை தானாக வெளியேறினார். தொடர்ந்து அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு, ஆர்.ஜே.ப்ராவோ உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டனர்.

ரெட் கார்டு: மேலும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனிலேயே பிரதீப்தான் ஹாட் டாபிக்காக இருந்தார். வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் இருந்து வியூகங்கள் வகுத்து விளையாடிய அவர் கண்டிப்பாக டைட்டில் வின்னராக மாறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி வெளியே அனுப்பப்பட்டார்.

Vanitha Vijayakumar has said that I am the only honest person in the world

எதிர்ப்பு: பிரதீப்பை அப்படி அனுப்பதியதற்கு பலரும் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். முக்கியமாக கமல் ஹாசனுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தன. இருந்தாலும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரிதான் என ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க மீண்டும் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டுக்குள் வரலாம் என தகவல் பரவியது. ஆனால் அவர் வரவில்லை. மாறாக அனன்யா ராவும், விஜய் வர்மாவும் உள்ளே வந்திருக்கின்றனர்.

இந்த வார எவிக்ட்: ஏற்கனவே வெளியே போனவர்கள் உள்ளே வந்ததும் போட்டியும் சுவாரஸ்யமாகியிருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் இந்த வாரம் ஜோவிகா எவிக்ட் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. ஜோவிகா உள்ளே இருந்தபோது சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தற்போது அவர் வெளியேற்றப்பட்டால் அந்த கண்டெண்ட் குறைந்துவிடுமோ என்றும் ரசிகரக்ள் கூறுகின்றனர்.

வனிதா விஜயகுமார்: இந்நிலையில் ஜோவிகாவின் தாயாரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஒரு திறந்த புத்தகம். உலகத்தில் என்னைபோன்ற நேர்மையான ஒருவர் கிடையவே கிடையாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என குறிபிட்டிருக்கிறார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு தன்னை பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் ஒருவர் நள்ளிரவு ஒரு மணிக்கு தாக்கிவிட்டதாக வீங்கிய முகத்துடன் புகைப்படம் போட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அதனை பார்த்த பலரும் இது சுத்த ஆக்டிங். வனிதா விஜயகுமார் இதுகுறித்து ஏன் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X