அந்த பையன் கேட்டான்.. லவ் பண்றேனு சொன்னேன்.. இளையராஜா வீட்டு பஞ்சாயத்தை விடாத வனிதா?

சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு Mrs&Mr திரைப்படம் வெளியானது. அவரது மகள் ஜோவிகாதான் படத்தை தயாரித்திருந்தார். வனிதா இயக்கிய முதல் படம் என்பதால் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படமோ ரசிகர்களை துளிக்கூட கவரவில்லை. படமே ஆபாச குடோனாக இருக்கிறது என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க இளையராஜா வழக்கும் போட்டிருக்கிறார்.

விஜயகுமாரின் மகளான வனிதா ஹீரோயினாக சினிமாவுக்குள் வந்தாலும்; இயக்குநர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு Mrs&Mr என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் படுதோல்வி: வனிதா இயக்கியிருக்கும் முதல் படம் என்பதால் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்டோரையெல்லாம் நேரில் சந்தித்தார். ப்ரோமோஷன் பணிகளும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தன. ஆனால் படம் படுதோல்வியடைந்தது. படத்தின் கதை, மேக்கிங் என எதுவுமே சரியாக இல்லை; கடமைக்கு எடுத்தது போல் இருக்கிறது என்ற விமர்சனம் பலமாகவே இருந்தது.

Vanitha Vijayakumar has something new to say about her issue with Ilayaraaja
Photo Credit:

இளையராஜாவுடன் பஞ்சாயத்து: இதற்கிடையே படத்தில் இளையராஜா இசையமைத்த சிவராத்திரி பாடலை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனை பார்த்து கொதிப்படைந்த ராஜாவோ நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார். அதுதொடர்பான வழக்கு விசாரணை இன்றுகூட வந்தது. ஆனால், காப்புரிமைகள் பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வனிதா தரப்பு அவகாசம் கோரியது. எனவே வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

வனிதா போட்ட குண்டு: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு விஷயம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அதாவது இளையராஜா வழக்கு தொடர்ந்தது தொடர்பாக பேசிய வனிதா, "நான் இளையராஜாவிடம் முன்பே கூறிவிட்டேன். சோனி நிறுவனத்திடம் நான் உரிமை பெற்றுவிட்டேன். நான் ராஜாவின் வீட்டில் ஒருத்தி. அந்த வீட்டுக்கு நான் மருமகளாக போயிருக்க வேண்டியவள். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது" என்று கூறி குண்டை போட்டார்.

வலுக்கும் கண்டனங்கள்: வனிதா இப்படி பேசியது திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள் என்று எதன் அடிப்படையில் வனிதா கூறுகிறார் என்று கேள்வி எழுப்பும் பலரும்; கார்த்திக் ராஜாவை இதில் இழுத்துவிடுகிறார்கள். ஆனால் கார்த்திக் அப்படிப்பட்ட ஆளே இல்லை என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமின்றி படத்தின் விளம்பரத்துக்காக இந்த விஷயத்தை வனிதா பயன்படுத்துகிறார் என்ற பேச்சுக்களும் வருகின்றன.

வனிதா கிளப்பிய புதிய புயல்: இந்நிலையில் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியிருக்கிறார் வனிதா. அதாவது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். எனக்கு அந்தக் குடும்பத்தில் எல்லோருமே நண்பர்கள்தான். பவதாரிணியெல்லாம் என் உடன் பிறவா சகோதரி. என்னை பவதாரிணியோ விட்ட குறை தொட்ட குறை என்று சொல்வார். எங்களுக்குள் ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கிறது.

அந்தக் குடும்பத்தில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அந்தப் பையன் என்னிடம் வந்து, 'நீ என்னை லவ் பண்றியா இல்லை என் அப்பாவை லவ் பண்றியானு கேட்டான். நான் உடனே, 'உன் அப்பாவைத்தான் லவ் பண்றேன் என சொன்னேன். இதெல்லாம் நடந்தது. நான் என் அப்பாவையே நீதிமன்றத்தில் சந்தித்துவிட்டேன். இளையராஜாவை நான் எப்போதும் தெய்வமாகத்தான் மதிக்கிறேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ அந்த பையன் என்று யாரை சொல்கிறார்; இவர் இப்போதைக்கு இந்தப் பஞ்சாயத்தை விடமாட்டார் போல என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X