For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீண்டும் பீட்டர் பாலுடன் இணையத் துடிக்கும் வனிதா விஜயகுமார்? புது ட்வீட்டை கவனிச்சீங்களா மக்களே!

  |

  சென்னை: அன்பா இருக்கணும், கொஞ்ச நாள் தான் வாழ்க்கை, கோபம் கூடாது என பம்மிய நிலையில் வனிதா விஜயகுமார் புது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

  மூன்றாவது முறையாக ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையே பீட்டர் பாலை கரம் பிடித்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

  சமீபத்தில், அவருடனும் சண்டை போட்டு விட்டு அவரை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளியது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

  எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வந்த.. வனிதா அக்காவை அடிக்க பாய்ந்து.. விளாசிவிட்ட பீட்டர் மாமா!எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு இங்க வந்த.. வனிதா அக்காவை அடிக்க பாய்ந்து.. விளாசிவிட்ட பீட்டர் மாமா!

  இது வேற வாய்

  இது வேற வாய்

  எந்த வாயால் பீட்டர் பாலை டீடோட்லர் என்று நற் சான்றிதழ் கொடுத்தாரோ வனிதா விஜயகுமார். அதே வாயால், அவரை வைத்தே, பீட்டர் பால் ஒரு மொடா குடிகாரர் என்றும், தனது பெயரை சொல்லி சினிமா உலகில் காசை ஆட்டைப் போட்டு குடிக்கிறார் என்றும் பரபரப்பு புகார் அளித்தார். கர்மா இஸ் பூமராங்.

  வெளியே தலை காட்ட முடியல

  வெளியே தலை காட்ட முடியல

  மூன்றாவது முறையாக திருமணம் செய்யப்பட்ட நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சோலோவாக நின்று சமாளித்த வனிதா விஜயகுமார், மூன்றாவது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருகிறார்.

  கேலி பேச்சு

  கேலி பேச்சு

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியிலும், வனிதா விஜயகுமாரை கேலியாகவும் கிண்டலாகவும் அவரது சொந்த வாழ்க்கையின் சோதனையான விஷயங்களையும் வைத்துத் தான் காமெடியன்கள் டி.ஆர்.பியை எகிற வைத்து வருகின்றனர்.

  மீண்டும் சேர முடிவு

  மீண்டும் சேர முடிவு

  பீட்டர் பாலுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவர் குடிகாரர் என்றும் கூறிய வனிதா விஜயகுமார், அவரை பற்றி தரக் குறைவாகவோ வச்சு விளாசவோ கிடையாது. இந்நிலையில், அவருடன் மீண்டும் சேர முடிவு எடுத்து, அவரை சந்திக்க சென்றுள்ளார். அங்கே தான் வில்லங்கம் ஆரம்பித்துள்ளது.

  விரட்டி விட்ட பீட்டர் பால்

  விரட்டி விட்ட பீட்டர் பால்

  பீட்டர் பால் எங்கெல்லாம் செல்கிறார். எப்போதெல்லாம் குடிக்கிறார் என வேவு பார்த்த விஷயங்களையும், நடுவிலே வந்தேன் நடுவிலே போய் விடுகிறேன். அவரது உடல் நலத்திற்கு ஏகப்பட்ட லட்சங்கள் செலவழித்து விட்டேன். இனியும் செலவு செய்ய முடியவில்லை என நைசாக கழட்டி விட்டதை மீடியாக்கள் மூலம் பேசி வைரலாக்கியதை அறிந்த பீட்டர் பால், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மீண்டும் வந்தாய் என விரட்டி அடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  உயிரை காப்பாற்ற வேண்டும்

  உயிரை காப்பாற்ற வேண்டும்

  இந்நிலையில், பீட்டர் பாலை கிழித்து தொங்கவிடுவார் வனிதா விஜயகுமார் என அவரது ரசிகர்கள் நினைத்த நிலையில், கனிவாக இருந்தால் தான் மனித இனம் என்பதற்கு அடையாளம் என்றும் தேவைப்படும் நேரங்களில் கோபம் கூட பரவாயில்லை. அதுவும் நம்மை மனிதர்கள் ஆக்கும். ஆனால், ஒரு உயிரை காப்பாற்ற கனிவாக இருப்பதே சிறந்தது என புது ட்வீட் போட்டுள்ளார்.

  லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா

  லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா

  மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா என பாடுவதை போல, வாழ்க்கை ரொம்பவே சிறியது. எதையும் நாம கூட எடுத்துட்டு போக போறதில்லை. கனிவாக இருங்கள், அன்புடன் வாழுங்கள் என வனிதா விஜயகுமார் ட்வீட் செய்துள்ளார். பீட்டர் பாலின் உடல் நலத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாகத்தான் மீண்டும் அவருடன் சேர வனிதா விரும்புகிறார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

  பூனம் பாண்டே மாதிரி

  பூனம் பாண்டே மாதிரி

  கோவாவுக்கு ஹனிமூன் போன இடத்தில் இதே மாதிரி தான் பூனம் பாண்டே தனது கணவர் தன்னை அடிக்கிறார். பலவந்த படுத்துகிறார் என புகார் அளித்து சிறைக்குத் தள்ளினார். பின்னர், சேர்த்துக் கொண்டார். அதே போல, நடிகை வனிதா விஜயகுமாரும், தனது கணவர் பீட்டர் பாலை மீண்டும் சேர்த்துக் கொள்ளத் துடிப்பதாகவும், இருவரும் விரைவிலே சேர்ந்து விடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  English summary
  Vanitha Vijayakumar indirectly share message to Peter Paul in her tweet and she wants again live with him. Peter Paul don’t like the rejoining decision some latest buzz circulates like this.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X