Vanitha: வனிதா அக்கா என்ன இதெல்லாம்.. கை புல்லா வளையல்.. திருமணத்திற்கு ரெடியா?

சென்னை: சோஷியல் மீடியாவில் இன்றைக்கு எந்த பக்கம் பார்த்தாலும் வனிதா விஜயகுமாரின் கல்யாண பேச்சுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. காலையில் ஒரு போட்டோவை வெளியிட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார் வனிதா. தற்போது இவர் கையில் வளையலுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார், வனிதாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி கொண்ட குடும்பம் என்பதால், மிகவும் எளிதாக சினிமாவில் நுழைந்தார்.

vanitha vijayakumar robert master marriage

சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான இவர்,மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ், தேவி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.இதையடுத்து, 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் வனிதா. இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என ஒரு மகன் பிறந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரித்தனர்.

vanitha vijayakumar robert master marriage

பிக் பாஸ் நிகழ்ச்சியில்: இதையடுத்து, 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்டார். அவருடனும் ஒத்துப்போகாததால், அவரையும் பிரிந்தார். அதன் பின்,விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டு மொத்தக்குடும்பமும் அவரை ஒதுக்கிவைத்ததை அடுத்து, தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் யாருக்கும் பயப்படாமல், போல்டாக பேசிய வனிதாவை அனைவருக்கும் பிடித்துப்போக பிரபலமானார்.

மூன்றாவது திருமணம்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், பீக்கில் இருந்த வனிதா, மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வீடியோவும், பீட்டர் பால் தாவிவந்த வனிதாவிற்கு முத்தம் கொடுத்த வீடியோவும், இணையத்தில் காட்டுத்தீப் போல பரவியது. இதையடுத்து, பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் ஜாலி ட்ரிப் போன வனிதா, வாழ்க்கையில் ஏமாந்துவிட்டதாக கதறி அழுது வீடியோ வெளியிட்டு பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இதையடுத்து, சில ஆண்டுகளிலேயே பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

vanitha vijayakumar robert master marriage

வனிதாவிற்கு கல்யாணமா: தற்போது வனிதா விஜயகுமார், அநீதி, தில்லு இருந்து போராடு, ஆபரேஷன் லைலா, ஹரா, அந்தகன், பிக் அப் டிராப் என அடுத்தடுத்து படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, இன்று வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் கைகளை பிடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் Save The Date' அக்டோபர் 5ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த இணையவாசிகள் வனிதாவிற்கு கல்யாணமா என்றும், பாவம் ராபர்ட் மாஸ்டர் என்றும் இணையத்தில் கமெண்டுகள் பறந்த நிலையில், இது, Mr&Mrs' படத்திற்கான போஸ்டர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

என்ன இதெல்லாம்: இந்நிலையில், வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராமில் கை நிறைய வளையல் போட்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இருந்தார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் வனிதா அக்கா என்ன இதெல்லாம் என்றும், திருமணத்திற்கு ரெடியா? என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை வனிதாவை இன்ஸ்டாகிராமில் 499K பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X