சின்ன விஜயக்குமார்.. அருண்விஜய்க்கு இவர்தான் போட்டி.. செம குஷியில் வனிதா! என்ன மேட்டருன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்தான் அருண் விஜய்க்கு போட்டி என தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் கணவரான ஆகாஷுக்கு பிறந்த குழந்தை விஜய் ஸ்ரீஹரியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகன் எப்படியாவது தன்னிடம் வந்துவிடுவார் என்று தெரிவித்து வருகின்றார்.
தனது அப்பா, அண்ணன், தங்கைகள் என ஒட்டு மொத்த குடும்பம் வனிதாவை புறக்கணித்துள்ளது. வனிதாவும் யார் யார் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தானும் கெஞ்சி பார்த்துவிட்டார், ஆனால் குடும்பத்தினர் அவரை ஏற்பதாக இல்லை.

விஜய்ஸ்ரீஹரி
இந்நிலையில் தனது மகனின் போட்டோவை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரியின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

உங்களின் அப்பாவை போன்றே
அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் குழந்தை ஒரு இளைஞர் ஆகிவிட்டார். விரைவில் உங்களுடன் சேர்ந்து உங்களை காப்பாற்றுவார் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிலர் உங்களின் மகன் உங்கள் அப்பாவை போன்றே இருக்கின்றார் என்றும் கூறியுள்ளனர்.
சேர்ந்து போட்டோ
வாவ்.. ரொம் சந்தோஷம் அக்கா.. இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்து போட்டிருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
பிரார்த்தனை செய்கிறேன்
குட் மார்னிங் சிஸ்டர்.. உங்க மகன் சீக்கிரமா உங்கக்கூட வருவான்.. அவன் உங்களை பாதுகாத்து காப்பாற்றுவான்.. நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.. கவலைப்படாதீங்க.. டேக் கேர் என தெரிவித்துள்ளார்.
நம்புகிறேன்
ஓ.. மை.. காட்.. அவர் அப்படியே அவரது தாத்தாவை போன்று இருக்கிறார்.. நீங்கள் இருவரும் சீக்கிரமே சேருவீர்கள் என்று நம்புகிறேன்.. அவருக்கு கடவுளின் ஆசிர்வாதம்.. என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
மகிழ்ச்சி
வாவ்.. நீங்க சந்தித்துக்கொண்டீர்களா.. அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி.. வாழ்த்துகள் வனி அக்கா.. அவர் சின்ன விஜயக்குமார்தான் என்று கூறியிருக்கிறார்.
விஜயகுமார் சார் மாதிரியே..
விஜயகுமார் சார் மாதிரியே இருக்கான் என்கிறார் இந்த நெட்டிசன்.
அருண்விஜய்க்கு போட்டி
அருண் விஜய்க்கு போட்டியாக இருக்கப்போகிறார் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஒன்று சேர வேண்டும்
அவருக்கு அவரின் அப்பா முகம்தான்.. ஆனால் நீங்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று கூறியிருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











