வரிசையாக வனிதா விஜயகுமாருக்கு வரும் சினிமா வாய்ப்பு.. பிரசாந்தின் அந்தகன் படத்திலும் இணைந்துள்ளார்!

சென்னை: பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாருன்னு விஜய் டிவியில் கலக்கி வரும் வனிதா விஜயகுமாருக்கு வரிசையாக சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகவுள்ள அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்திலும் வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார்.

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், நடிகர் பிரசாந்தை வாழ்த்தி உள்ளார் வனிதா விஜயகுமார்.

அந்தாதூன்

அந்தாதூன்

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அந்தாதூன். ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். திறமையான பியானோ கலைஞராக மாற வேண்டும் என்பதற்காக நாயகன் கண் தெரியாதவராக நடிப்பதும், தபு தனது கணவரை கள்ளக் காதலர் உடன் இணைந்து கொள்வதை பார்த்துவிடும் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பது தான் அந்தாதூன் கதை.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

அந்தாதூன் படத்தை அந்தகன் (பார்வையற்றவன்) எனும் டைட்டிலில் இயக்குநர் தியாகராஜன் இயக்கவுள்ளார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார். தபு நடித்த ரோலில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மீண்டும் இணைந்த ஜோடி

மீண்டும் இணைந்த ஜோடி

நடிகர் பிரசாந்தின் ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், தமிழ் உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்த சிம்ரன் மீண்டும் அவருடன் இணைந்து அந்தகன் படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இந்த படத்தில் சிம்ரன் ஜோடியாக நடிக்காமல் வில்லியாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவுக்கு என்ன ரோல்

வனிதாவுக்கு என்ன ரோல்

நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. இது தொடர்பாக நடிகர் பிரசாந்த் போட்ட ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த வனிதா விஜயகுமார், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக் கூறிவிட்டு, சீக்கிரமே அந்தகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என பதிவிட்டு, அந்தகன் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

வரிசை கட்டும் சினிமா வாய்ப்பு

வரிசை கட்டும் சினிமா வாய்ப்பு

தளபதி விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அடுத்ததாக ராஜ்கிரணின் மாணிக்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த வனிதா, மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

நான்கு படங்கள்

நான்கு படங்கள்

ஆதம் தாசன் இயக்கும் பாம்பு சட்டை, வனிதா விஜயகுமார் லீடு ரோலில் நடிக்கும் அனல் காற்று, நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்திலும் இணைந்துள்ள வனிதா விஜயகுமாருக்கு மேலும் பல சினிமா வாய்ப்புகள் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X