Vanitha Vijayakumar: மங்கிஸ்தா.. கிங்கிஸ்தா.. வனிதா விஜயகுமாரின் பிங்க் லிப்ஸ்டிக்.. செம கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாவில் என்ன போஸ்ட் போட்டாலும் அது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி விடுகிறது.
தனது இளைய மகளின் 14வது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
அப்பாவிடம் மகள் வளர்ந்து வந்தாலும், அம்மா மீதுள்ள பாசம் குறைந்து விடுமா என்ன என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வனிதாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், பிங்க் லிப்ஸ்டிக் உடன் புதிய போட்டோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார் வனிதா.

பிக் பாஸில் வத்திக்குச்சி வனிதா:
விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்த வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார். குடும்ப பிரச்சனைக் காரணமாக ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கொஞ்ச வருடங்கள் மீடியா வெளிச்சமே படாமல் இருந்து வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்திக்குச்சி வனிதாவாக மாஸ் என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக் பாஸ் ஜோடிகள், பிக் பாஸ் ஓடிடி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விமர்சனம் கொடுப்பது என வனிதா விஜயகுமார் தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.
மீண்டும் சினிமாவில் கலக்கல்:
பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் பிக்கப் டிராப் என பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
போலீஸ் அதிகாரியாகவும் வக்கீலாகவும் செம போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் வனிதா சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் அடிக்கடி தலை காட்டி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.
பிங்க் லிப்ஸ்டிக்:
சமீபத்தில் தனது இளைய மகள் பிறந்தநாளை கொண்டாடிய போஸ்ட்டை பதிவிட்டு இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் லிப்ஸ்டிக்கை உதட்டில் போட்டுக் கொண்டு செம ஜூம் செய்யப்பட்ட ஹாட் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

வனிதாவின் இந்த லுக்கை பார்த்த பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் லைக் போட்டு கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
மங்கிஸ்தா கிங்கிஸ்தா:
அதே சமயம் வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ள இந்த போஸ்ட்டுக்கு சில ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. நெட்டிசன் ஒருவர் வனிதாவின் இந்த போட்டோவை பார்த்து ஆடிப்போன நிலையில், மங்கிஸ்தா கிங்கிஸ்தா.. ஹா கிங்கிஸ்தா பாயாஸா.. அப்படி இருக்கு உங்க ஃபேஸ் என கிண்டல் செய்து கமெண்ட் போட்டுள்ளார்.
செம டைட்டான உடையுடனும் சமீபத்தில் போட்டோவை வெளியிட்டு தான் எப்பவுமே ஹாட் என நிரூபித்துள்ளார் வனிதா விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











