பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக.. டிஆர்பி குயின்.. 'வத்திக்குச்சி' வனிதாவுக்கு மீண்டும் வாய்ப்பு?

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக மீண்டும் வனிதாவை இறக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Recommended Video

ACTOR NANI EXCLUSIVE | MANI RATNAM SIR தான் என்னோட ONLINE TEACHER |V MOVIE | FILMIBEAT TAMIL

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் இதற்கான புரமோ தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் வனிதா

மீண்டும் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் தெறிக்கவிட்ட நடிகை வனிதா விஜயக்குமாரை மீண்டும் இந்த சீசனில் ஸ்பெஷல் கேடரில் கொண்டு வருவதற்காக டிஸ்கஷன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சொந்த வீடு போன்று

சொந்த வீடு போன்று

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தான் சொல்வதுதான் சரி, தான் சொல்வதைதான் மற்றவர் கேட்க வேண்டும் என்ற ரீதியில் குரலை உயர்த்தி அதிகாரம் செலுத்தி வந்தார். மற்றவர் சொல்வதை கொஞ்சம் கூட காதில் போட்டுக்கொள்ளாத வனிதா, பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சொந்த வீடு போன்று அதிகாரம் செலுத்தி வந்தார்.

கழுவி ஊற்றினர்

கழுவி ஊற்றினர்

தனக்கென ஒரு குரூப்பை ஃபார்ம் செய்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் அல்லி ராஜ்ஜியம் செய்து வந்தார். அவரது அட்ராசிட்டியை பார்த்து பிரபலங்கள் பலரும் அவரை விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர். அவரது அப்பாவான நடிகர் விஜயக்குமாரையெல்லாம் இழுத்து பேசினர்.

 பதைபதைப்புடன்..

பதைபதைப்புடன்..

நாள்தோறும் ஒருவருடன் சண்டை சச்சரவு வம்பு தும்பு என வனிதாவால் பிக்பாஸ் வீடே போர்க்களம் போல் காட்சியளித்தது. இன்னைக்கு யார் சிக்கப் போகிறார்களோ என்ற பதைபதைப்புடனே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர் ரசிகர்கள்.

2வது வாரத்திலேயே

2வது வாரத்திலேயே

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த 2 வாரங்களிலேயே பார்வையாளர்களின் எதிர்ப்பை சம்பாதித்த வனிதா இரண்டாவது வாரத்திலேயே அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வனிதா விஜயக்குமார் வெளியேறிய பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்தது.

மீண்டும் என்ட்ரி

மீண்டும் என்ட்ரி

அதன்பிறகு படுத்த படுக்கையாக கிடந்த பிக்பாஸை எடுத்து எழுப்ப வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக கொண்டுவந்தார். இதனால் நிகழ்ச்சி மீண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்தார் வனிதா.

சூர்யா தேவி, ஹெலன்

சூர்யா தேவி, ஹெலன்

முகென் அபிராமி இடையே பிரச்சனை, மதுமிதா தற்கொலை முயற்சி என தீயாய் இருந்தது பிக்பாஸ். டிஆர்பிக்காக இறுதி வரை வனிதாவை வெளியே விடாமல் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். இந்நிலையில் இந்த சீசனில் சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

கெஸ்ட்டாக

கெஸ்ட்டாக

இதனால் அவர்களுக்கு ஈடுகொடுக்கவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூடு குறையாமல் இருக்கவும் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக மீண்டும் வனிதாவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே முதல் நாள் முதல் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களில் கெஸ்ட்டாக அவரை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.

எப்படி இருக்கும்?

எப்படி இருக்கும்?

வனிதா கடந்த ஜூன் மாதம் தான் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் ஹெலன் தனது கணவர் தனக்கு வேண்டும் என போராடி வரும் நிலையில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் எப்படி இருக்கும் என இப்போதே ரசிகர்கள் தங்களின் கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X