வனிதா கழுத்தில் தாலி கட்டி நச்சுனு முத்தம் கொடுத்த நடிகர்.. ஜிவ்வுன்னு இழுக்கும் ரியாக்ஷன் சூப்பர்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு கல்யாணம் என்றாலே அந்த விஷயம் இணையத்தில், மிகப்பெரிய அளவில் பரபரப்பாகி பேசுபொருளாகிவிடும். அப்படிதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பவர் ஸ்டாரை கல்யாணம் செய்து கொண்டதாக இணையத்துல ஒரு போட்டோ வெளியாகி, அந்த செய்தி டிரெண்டானது. இதையே கையில் எடுத்துக் கொண்டால் நம்ம வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டர் தாலி கட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடிகையாக வலம் வருவார் என எதிர்பாத்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இருகுழந்தைகள் பிறந்த நிலையில், ஆகாசை பிரிந்தார். அதன் பின், ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். அவரின் மகள் தான் ஜெயனிதா. இதில், ஸ்ரீஹரி அவரின் தந்தையுடன் இருப்பதால் கூறிவிட்டதால், ஆகாஷ் அவரை வளர்த்து தற்போது ஹீரோவாக்கி உள்ளார். தற்போது ஸ்ரீஹரி ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா: அடுத்தடுத்து சர்ச்சையிலும், டிவி பேட்டியில் மட்டுமே தென்பட்டு வந்த நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் நுழைந்தார். வந்ததுமே நான் இப்படித்தான் என்று எதற்கும் பயப்படாமல் துணிச்சலாக பல விஷயத்தை பேசினார். இதனால், வனிதாவிற்கு என்று தனி ரசிகர்கள் உருவானார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா, குக் வித் கோமாளியில் கலந்துக்கொண்டு விதவிதமாக சமைத்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில், வீடியோவை வெளியிட்டு வந்தார்.

Mrs & Mr படத்தில்: அப்போது தான் வனிதாவிற்கு, பீட்டர் பாலுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதைத் தொடர்ந்து அவர், கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார். அதன் பின் சினிமாவில் பிஸியான வனிதா அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் ராபர்ட் மாஸ்டர் இணைந்து Mrs & Mr திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே, வனிதாவிற்கு நான்காவது திருமணமா என இணையத்தில் செய்திகள் வெளியானது.

கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்: தற்போது, ராபர்ட் மாஸ்டர், வனிதாவின் கழுத்தில் தாலி கட்டி, நச்சுனு முத்தம் கொடுக்கும் திருமண காட்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், " முதல் தடவை திருமணம் செய்து கொள்வது போன்று உள்ளது உங்களின் ரியாக்ஷன்..." என பதிவிட்டுள்ளார். Mrs & Mr திரைப்படத்தில் 40 வயதை தாண்டிய பெண் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பாத்திமா பாபு, ஆர்த்தி, பவர் ஸ்டார், ஷர்மிளா,ஸ்ரீமன், கிரண், செஃப் தாமு ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











