அடுத்த திருமணம் பற்றிய கேள்வி.. வனிதா விஜயகுமார் சிரித்துக் கொண்டே என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: வனிதா விஜயகுமார், சோனியா அகர்வால், முமைத் கான் நடிப்பில் 'தண்டுபாளையம்' எனும் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள தாய்லாந்தில் இருந்து வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார். மேலும், திருமணம் பற்றிய கேள்விக்கு சிரித்துக் கொண்டே அவர் சொன்ன பதில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Vanitha Vijayakumar open reply for her next marriage question

அதன் பின்னர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் தேவி படத்தின் மூலம் அங்கேயும் காலடி எடுத்து வைத்தார். தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த வனிதா விஜயகுமார் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அசத்தி வருகிறார்.

சோனியா அகர்வாலுடன் இணைந்து: கன்னடத்தில் வெளியான 'தண்டுபால்யா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கொடூரக் கொலைகளை செய்யும் கொள்ளைக்கார கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. பூஜா காந்தி அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அதே கான்செப்டை மையமாக வைத்து சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்துள்ள படத்துக்கு 'தண்டுபாளையம்' என பெயர் வைத்துள்ளனர். விரைவில் அந்த படம் திரைக்கு வருகிறது. அதை முன்னிட்டு நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

சோனியாவை பாராட்டிய வனிதா: சோனியா அகர்வால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வனிதா விஜயகுமாருடன் இணைந்து தண்டுபாளையம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனக்கு டெரரான ரோல் என்றும் தன்னை விட டெரராக கழுத்தை அறுக்கும் காட்சிகளில் அசால்ட்டாக நடித்து சோனியா அகர்வால் மாஸ் காட்டியிருக்கிறார். முதலில் சோனியாவா நடிக்குது என நினைத்தேன். அவரது நடிப்பை பார்த்து மிரண்டே போய்விட்டேன் எனக் கூறியுள்ளார்.

செல்வியாகவே இருப்பீங்களா?: தாய்லாந்தில் தனது மகள் ஜோவிகாவுடன் புதிய பட வேலையில் பிசியாக இருந்தேன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என ஃபிளைட் டிக்கெட் எல்லாம் போட்டு அழைத்தனர். எனக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. அதற்காக தாய்லாந்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து இருக்கிறேன். மீண்டும் தாய்லாந்து புறப்படப் போகிறேன் வெளியே வனிதா விஜயகுமார் பேசும்போது செல்வி ஆகவே இருப்பீங்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வனிதா விஜயகுமார், தமிழ்நாட்டுக்கு இப்போ இதுதான் ரொம்ப முக்கியம் என சொல்லி சிரித்து விட்டு அப்படி ஏதாவது நடந்தால் கண்டிப்பா சொல்றேன் எனக்கூறிவிட்டு சென்றார்.

வனிதா விஜயகுமார் திருமண வாழ்க்கை: நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ஆனந்த் ஜெயராம் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் அந்த திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வெடிக்க 2012ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கடைசியாக பீட்டர் பால் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து அதே வருடம் அவரை விட்டு பிரிந்தார். உடல்நலக்குறைவு காரணமாக பீட்டர் பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X