என் மகள் ஜோவிகா தப்பு பண்ணமாட்டா..பிக்பாஸுக்குள் போனால் கரியர் காலி..வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸில் எனது நம்பிக்கை எந்த தவறும் செய்யமாட்டாள் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் 7 தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆரம்பித்த சில நாட்களிலேயே எவிக்‌ஷனுக்கான நாமினேஷன், வீட்டில் இருப்பவர்களுக்குள் பஞ்சாயத்து என்று களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்களில் கவனம் ஈர்த்தவர்களில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் ஒருவர். மிகவும் இள வயதான அவர் இந்த வீட்டுக்குள் தாக்குப்பிடிப்பாரா என்றும்; தனது தாயை போல் ரொம்பவே ரக்கடாக நடந்துகொள்வாரா என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

கூல் ஜோவிகா: ஆனால் ஜோவிகாவோ ரொம்பவே கூலாக அனைத்தையும் ஹேண்டில் செய்துவருகிறார். பள்ளி படிப்பு குறித்த பேச்சு வந்தபோது வேறு ஏதாவது டாப்பிக்குக்குள் போகலாமே என கேஷுவலாக கடந்து சென்றார். அதேபோல் நேற்று பவா செல்லதுரை சொன்ன கதையில் இருந்த சந்தேகங்களை நேரடியாகவே அவரிடம் கேட்டு தெளிவு பெறவும் முயற்சிக்கிறார். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் அவர் தாக்குப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.

Vanitha Vijayakumar Open Talks About Jovika And Bigg Boss 7

வனிதா பேட்டி: இந்நிலையில் தில்லு இருந்தா போராடு படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. அப்போது வனிதா விஜயகுமாரிடம் செய்தியாளர்கள் ஜோவிகா பற்றியும் பிக்பாஸ் பற்றியும் கேள்விகள் எழுப்பினர். அப்போது பேசிய அவர், " நான் என் மகளுக்கு எதுவுமே சொல்லி பிக்பாஸுக்கு அனுப்பவில்லை.

சினிமானா ஓகே: திரைப்படத்தில் நடிக்கிறாள் என்றால் அதற்கு என்னுடைய ஐடியாவை சொல்லலாம். ஆனால் பிக்பாஸ் என்பது ரியாலிட்டி. அதில் ஒவ்வொருவருக்கென்று தனி குவாலிட்டி இருக்கிறது.அதிலும் ஜோவிகாவுக்கு நிறையவே இருக்கிறது. அது எனக்கு தெரிந்ததாலும் தைரியம் இருந்ததாலும் உள்ளே அனுப்பியிருக்கேன்.

அனுப்பியிருக்கவே மாட்டேன்: அவள் மேல் எனக்கு சந்தேகம் இருந்திருந்தால் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருக்கவே மாட்டேன். ஏனென்றால் இதற்கு ட்ரெய்னிங் கொடுக்க முடியாது. பிக்பாஸில் கலந்துகொள்ள காலேஜுக்கும் போக முடியாது. அவள் ஒரு வித்தியாசமானவள். அது உங்கள் அனைவருக்கும் கடைசியில் புரிய வரும். அந்த கேரக்டரை நீங்கள் விரும்புவீர்கள் என்று தெரியும். இந்த சீசனில் யுகேந்திரன் விசித்திரா எல்லாம் பிரபலமான ஆட்கள்தான்.

பிக்பாஸ் சென்றால் கரியர் காலி: பிக்பாஸுக்குள் சென்றால் கரியர் காலி ஆகிவிடும் என்று நிறைய பேர் பயப்படுகிறார்கள். என்னிடமும் அதுபற்றி பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி ஒரு தில்லு வேண்டும். அந்த தில்லு இருக்கிற விசித்திரா உள்ளிட்டோர் போயிருக்கிறார்கள். இவர்கள் தவிர சீரியலில் பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். இப்போது சினிமாவைவிட சீரியல்தானே ஃபேமஸ் ஆகியிருக்கிறது. நான் பிக்பாஸ் குறித்து நேர்மையான விமர்சனம்தான் கொடுப்பேன்.

விசித்திரா பயந்தார்: விசித்திரா உள்ளே போகும்போது பயந்தபடிதான் போனார்.என்னிடம் நிறைய பேசிவிட்டுத்தான் உள்ளே போனார். அவர் தவறு செய்தால் தவறு என்றுதான் சொல்வேன். ஜோவிகா அவள் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறாள். எனது மகள் எந்த தப்பும் பண்ணமாட்டாள் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அப்படி பேசியிருக்கக்கூடாது: விசித்திராவே மாடர்னாக ட்ரெஸ் செய்பவர்தான். ஆனால் ஏன் அப்படி உளறினார் என்றுதான் தெரியவில்லை. அவர் ஆடையை பற்றி அப்படி சொல்லியிருக்கவேக்கூடாது. அது ரொம்பவே தவறான விஷயம். அதுமட்டுமின்றி ஒரு பெண்ணின் பெயரை மாற்றி சொல்லி நாமினேஷன் வேறு செய்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X