பெண்கள் தம் அடிப்பது.. தண்ணி அடிப்பது தனிப்பட்ட விஷயம்.. வனிதா அதிரடி பதில்!

சென்னை: Actress Vanitha (வனிதா விஜயகுமார்) நடிகை வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் போட்டோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், அது குறித்து அவர் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமார் எந்த விதமான சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிடாமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Vanitha Vijayakumar opines that women smoking is their personal matter

தற்போது இவர், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு வனிதா புகைப்பிடிக்கும் போட்டைவை வெளியிட்டு இருந்தது.

நெட்டிசன்கள் ட்ரோல்: வனிதா தம் அடிக்கும் போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் வனிதாவை திட்டி தீர்த்தனர். அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த், குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்து இருந்தால், நான் இப்போது இருப்பதைவிட இன்னும் உயரத்தில் இருந்து இருப்பேன். இதனால் குடிக்கு அடிமையாகாதீர்கள் என்று பேசி இருந்தார். ரஜினி சொன்னதை வைத்தும், வனிதா புகைப்பிடித்த போட்டோவை வைத்தும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

கதைக்கு எது தேவையோ: இந்நிலையில், வனிதா அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது,செய்தியாளர்கள் தம் அடிக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் ஒரு நடிகை என்பதால், கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்தேன். அது நடிப்பு. இதை பார்த்துவிட்டு நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

தனிப்பட்ட விஷயம்: காலம் மாறுகிறது, பெண்கள் தம் அடிப்பது, தண்ணியடிப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் சர்ச்சையாக்க தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் அனைவரும் குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று சொல்வார்கள். ஆனால், சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

இதனால், சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்காதீர்கள். நடிகர்கள் படங்களில் புகை பிடிப்பதை வரவேற்கிறீர்கள். ஆனால், அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறார்கள் என்று அதிரடியான பதில் அடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X