ராதா ரவி என் சொந்த அப்பா மாதிரி.. வனிதா விஜயகுமார் வெளியிட்ட போட்டோ.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: நடிகர் ராதா ரவி உடன் வனிதா விஜயகுமார் கொடைக்கானலில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார். இந்த வயதிலும் தொடர்ந்து சினிமாவில் ராதா ரவி நடித்து வரும் நிலையில், இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ராதா ரவி தனது சொந்த அப்பா மாதிரி என அந்த போட்டோவுக்கு வனிதா விஜயகுமார் கொடுத்துள்ள கேப்ஷனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படங்களில் பிஸி
நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவிற்கு மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை மற்றும் சகோதரர் அருண் விஜய் மற்றும் தங்கைகளுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக தனது வாழ்க்கையை லீடு செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கிடைத்த புகழ் காரணமாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.

ராதா ரவியுடன் கொடைக்கானலில்
இந்நிலையில், நடிகர் ராதா ரவியுடன் கொடைக்கானலில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார். அந்த போட்டோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அப்பா மாதிரி
என் அம்மாவோட இறுதிச்சடங்கில் என்னை பங்கேற்க வைத்ததில் பெரும் பங்கு நடிகர் ராதா ரவி மற்றும் சரத்குமாருக்கு மட்டுமே உண்டு. அந்த இருவரையும் எப்போதுமே நான் மறக்கவே மாட்டேன். கொடைக்கானலில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருவரும் இணைந்துள்ளோம். ராதா ரவியின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா போஸ்ட்டுடன் பதிவிட்டுள்ளார்.

அம்மாவின் இறுதிச்சடங்கு

போல்டான மனிதர்கள்
இரண்டு போல்டான மனிதர்களும் ஒன்றாக களமிறங்கி உள்ளனர். எல்லாமே சிறப்பாக அமையும், நிச்சயம் உங்கள் படம் வெற்றி பெறும் வனிதா என அவரது ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

Click it and Unblock the Notifications