'நாம் ஒன்றாக சினிமாவுக்கு வந்தோம்..' இந்த வெற்றிக்கு தகுதியானவர் நீங்கள்.. அஜித்தை புகழும் வனிதா!

By

சென்னை: இந்த வெற்றிக்குத் தகுதியானவர் நீங்கள் என்றும் தான் சந்தித்த உண்மையானமனிதர்களில் நீங்களும் ஒருவர் என்றும் அஜித்குமாரை நடிகை வனிதா புகழ்ந்துள்ளார்.

Recommended Video

Vanitha இழிவுபடுத்தியதை கண்டித்து Lakshmi Legal Notice

கடந்த சில நாட்களாக கடுமையான சர்ச்சையில் சிக்கி வருகிறார் வனிதா. அவர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியா தேவி, நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் உட்பட பலர் வனிதாவின் திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இதையடுத்து சூரியாதேவி மீது புகார் கொடுத்த வனிதா, கஸ்தூரியையும் லட்சுமி ராமகிருஷ்ணனையும் சரமாரியாகத் திட்டினார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இது பரபரப்பாகி இருக்கும் நிலையில், இப்போது நடிகர் அஜித்தை அவர் புகழ்ந்துள்ளார். அஜித், இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி ஜோடியாக நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். லாக்டவுன் காரணமாக இப்போது ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

காமன் டிபி

காமன் டிபி

நடிகர் அஜித் சினிமாவுக்கு வந்து 28 வருடங்கள் ஆகிறது. அவர் அமராவதி படம் மூலம் ஹீரோ ஆனார். இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி 28 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அவர் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கான காமன் டிபியை, பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

பாம்புகள் மத்தியில்

பாம்புகள் மத்தியில்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் பிரசன்னா, பிரேம்ஜி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அந்தப் பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த காமன் டிபியில் பாம்புகள் மத்தியில் கம்பீரமாக நடிகர் அஜித் நிற்கிறார். தன்னம்பிக்கை சிகரம் என்று அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த டிபி வைரலாகி வருகிறது.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

இதையடுத்து நடிகர் அஜித்தை பல சினிமா பிரபலங்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதாவும் அந்த காமன் டிபியை பதிவிட்டுப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 'நம்ப முடியாததுதான். ஆனால் உண்மை. நாமெல்லாம் ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தோம். சினிமாவில் நல்லது கெட்டதுகளை பார்த்துவிட்டோம். அஜித், இந்த வெற்றிக்குத் தகுதியானவர்.

கடவுள் ஆசிர்வதிப்பார்

கடவுள் ஆசிர்வதிப்பார்

நான் சந்தித்த மிகவும் எளிமையான, உண்மையான, கனிவான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களையும், ஷாலினியையும் கடவுள் ஆசிர்வதிப்பார். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தன்னை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகை வனிதாவுக்கு, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X