புருஷன வச்சிருக்கான்னு சண்டை போட்ட தான் பர்சனல்.. பிக் பாஸ் தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் தனலட்சுமியின் தரமான கேம் குறித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் உள்ளிட்டவற்றில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். வத்திக்குச்சி வனிதா என்றே பட்டம் கொடுக்கப்பட்ட வனிதா அல்டிமேட்டில் சில காரணங்களுக்காக அவரே வெளியேறினார்.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் வனிதா விஜயகுமார் தனலட்சுமியின் விளையாட்டு குறித்து பேசி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மக்கள் போட்டியாளர்
டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி 20 ஆயிரம் மக்கள் போட்டியிட்டதில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இன்னொரு போட்டியாளராக ஷிவின் பங்கேற்றுள்ளார். இந்த இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பராகவும் தைரியமாகவும் விளையாடி வருகின்றனர் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தனலட்சுமியின் கேம்
தனலட்சுமி தெளிவாக தன்னுடைய கேமை விளையாடி வருகிறார். இதில் அவர் பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து விளையாடி வருகிறார் என்று சொல்வது எல்லாம் சுத்த வேடிக்கையாக உள்ளது. அசீம் தனலட்சுமி பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து விளையாடி வருகிறார் என சில முறை குற்றம்சாட்டிய நிலையில், எழுந்த விவாதத்தில் வனிதா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவ புருஷன இவ
தனலட்சுமி சுத்த ப்ரொபஷனலாகவே தனது கேமை விளையாடி வருகிறார் என்றும் அவ புருஷனை இவ வச்சிக்கிட்டு, இவ புருஷனை அவ வச்சிக்கிட்டாத்தான் சொந்த பகையெல்லாம் வரும்.. இது ஜஸ்ட் கேம்.. மற்ற போட்டியாளர்களை விட தனலட்சுமி நல்லா போல்டா தனது கேமை விளையாடி வருகிறார் என வனிதா விஜயகுமார் தனது ஸ்டைலில் தடாலடியாக கூறியுள்ளார்.

ஷெரினா, ஆயிஷாவை விட
சில போட்டியாளர்களை பார்த்தாலே புடிக்க மாட்டேங்குது, ஆயிஷா, ஷெரினாவை விட தனலட்சுமி இந்த பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராங் போட்டியாளராகவே திகழ்கிறார். கண்டிப்பாக கடைசி வரை அவர் தனது கேமை விளையாடி விட்டு செல்வார் என தெரிகிறது என வனிதா விஜயகுமார் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











