ஓவர் ஐஸ்சா இருக்கே..? நீங்க ஒயின் பாட்டில் போல.. விஜய்யை திடீரென பாராட்டும் நடிகை வனிதா!

By

சென்னை: நடிகர் விஜய்யை நடிகை வனிதா திடீரென பாராட்டி இருப்பதை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

Recommended Video

Vanitha கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது? மறுப்பு தெரிவித்த NanjilVijayan

கடந்த சில நாட்களாக கடுமையான சர்ச்சையில் சிக்கி வருகிறார் வனிதா. அவர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

சூர்யா தேவி

சூர்யா தேவி

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியா தேவி, நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் உட்பட பலர் வனிதாவின் திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இதையடுத்து சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதா.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

அந்தப் புகாரில், தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். பின்னர் சூரியாதேவி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பின்னர் நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரையும் சரமாரியாக விமர்சித்தார் வனிதா. இணையதளம் ஒன்றின் நேரலையில் கலந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணனை, அநாகரிகமாக பேசினார் வனிதா.

வக்கீல் நோட்டீஸ்

வக்கீல் நோட்டீஸ்

இது சமூக வலைதளத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.1 கோடியே 25 லட்சம் நஷ்ட நஷ்ட ஈடு தர வேண்டும் வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பினார். பிறகு,வனிதாவும் தன்னை களங்கப்படுத்தியதாக ரூ.2 கோடியே 50 லட்சம் இழப்பீடு கேட்டு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

சந்திரலேகா போஸ்டர்

சந்திரலேகா போஸ்டர்

இதனால் மீண்டும் பரபரப்பான இவர்கள் மோதல் இப்போது அமைதியாகி இருக்கிறது.
இந்நிலையில், நடிகை வனிதாவின் முதல் படமான 'சந்திரலேகா' போஸ்டரை ரசிகர் ஒருவர் அவருக்குப் பகிர்ந்திருந்தார். அந்த படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமானார் வனிதா. 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நம்பிராஜன் இயக்கி இருந்தார்.

ஒயின் பாட்டில் போல

ஒயின் பாட்டில் போல

அந்த படம் பற்றி நடிகர் விஜய்க்கு டேக் செய்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது: என் முதலும் எப்போதுமான ஹீரோ நீங்கள்தான். நான் உங்கள் முதல் ரசிகை. நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் வரும்போது உங்கள் மீதான அன்பும் மரியாதையும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல. வயதும் முதிர்ச்சியும் அதிகரிக்க, உங்கள் மீதான அன்பை மேலும் உயர்த்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

ஏன் இந்த ஐஸ்?

ஏன் இந்த ஐஸ்?

இதையடுத்து ஏன் இந்த ஐஸ் என்றும் இதுக்கு முன்னால், விஜய் உங்களுக்குத்தான் தளபதி எனக்கு வெறும் விஜய்தான் என்று சொன்னீர்களே என்றும் சில ரசிகர்கள் கூறியுள்ளனர். சிலர் அவரை கடுமையாக கலாய்த்துள்ளனர். விஜய் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு தேவையாக இருப்பதால், இப்போது இப்படி பதிவிட்டிருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X