பொண்டாட்டியை விட்டுட்டு ஏன் வந்தீங்க? சினேகனிடம் வரம்பு மீறி சண்டைக்கு போன வனிதா.. வெடிக்கும் வீடு!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் ரசிகர்கள் எதை ஃபாலோ செய்வது எதை விடுவது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.

இதன் இடையே அடிக்கடி புதிய புரமோக்களை வெளியிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மைலேஜ் தேடி வருகிறது.

வழக்கம் போல பழைய ஃபார்மேட்டான இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஷோவை பார்த்து விடலாம் என ரசிகர்கள் நினைத்தாலும், வனிதாவின் அதகளம் அந்த நிகழ்ச்சியை உடனடியாக பார்க்க வைக்க தூண்டுகிறது.

காபிக்கு சண்டை

காபிக்கு சண்டை

டீ தூள் மட்டும் கொடுத்து விட்ட பிக் பாஸ் வனிதாவுக்கான காபி தூளை கொடுக்காமல் அழகாக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்த வனிதா விஜயகுமார் டீ தூளையும் ஒளித்து வைத்து மற்ற ஹவுஸ்மேட்களின் மண்டையை காய வைத்துள்ளார்.

புரமோ 4

புரமோ 4

பிக் பாஸ் புரமோக்களில் பிரியங்காவுக்கு பதிலாக தற்போது வனிதா விஜயகுமார் வந்து விட்டார். ஓவர் டாமினேஷன் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பிக் பாஸ் நட்சத்திரமாக வனிதா பேச உட்கார அனிதா சம்பத், சினேகன் உள்ளிட்டோர் அவர்களிடம் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் புரமோவிலும் வனிதா மற்றவர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

அனிதாவுக்கு ஆப்பு

அனிதாவுக்கு ஆப்பு

வனிதா vs அனிதா மோதல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எந்த விஷயத்தையும் கன்டென்ட்டாக மாற்ற ஏன் முயற்சிக்கிறீங்க என மக்கள் கேட்குறாங்க என கேள்வி கேட்க நீங்க மக்கள் கிட்டயே அதை கேளுங்க என்று பதிலடி கொடுத்தார் வனிதா. மறுபடியும் எங்க கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க என சொல்ல நான் உங்களை கூப்பிட்டேனா என ஆஃப் செய்து விட்டார்.

பொண்டாட்டியை விட்டு ஏன் வந்தீங்க

பொண்டாட்டியை விட்டு ஏன் வந்தீங்க

இதை ஒரு கேமுக்காக எடுத்துக் கொண்டு கேள்விக்கு பதில் சொல்லுங்க என அடாவடித்தனம் செய்து கொண்டு பேசி வந்த வனிதாவிடம் சினேகன் சொல்ல நீங்க ஏன் உங்க பொண்டாட்டியை விட்டுட்டு இந்த கேமுக்கு வந்தீங்க என சம்பந்தமில்லாத கேள்வியை எழுப்பி சினேகனை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கொடுத்த காசுக்கு

கொடுத்த காசுக்கு

வனிதா ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அடிக்க முயற்சிப்பதை பார்த்த ரசிகர்கள் கொடுத்த காசுக்கு நல்லா கூவுறாங்கடா என கலாய்த்து வருகின்றனர். வனிதாவின் ஆர்மியினரோ யாருக்கும் அஞ்சாத அக்கா அவங்க இந்த சீசன் டைட்டில் வின்னரே அவங்க தான் என சமூக வலைதளங்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர். சண்டை போட்டால் மட்டும் டைட்டிலை வெல்ல முடியாது என்பது எப்போது தான் இந்த போட்டியாளர்களுக்கு புரியப் போகிறதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X