ரூ.1 கோடி பறிக்கவே பீட்டர் பால் மீது முதல் மனைவி புகார்.. நடிகை வனிதா விஜயகுமார் திடீர் பரபரப்பு!

By

சென்னை: ஒரு கோடி ரூபாய் பறிக்கவே பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

1 கோடி கேட்ட முதல் மனைவி... வனிதா மூன்றாவது கணவருக்கு சிக்கல்

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக, பீட்டர் பால் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

லிப் லாக் முத்தத்துடன் நடைபெற்ற இவர்கள் திருமண போட்டோஸ், சமூக வலைதளங்களில் வைரலாகின.

எட்டு ஆண்டுகள் கழித்து

எட்டு ஆண்டுகள் கழித்து

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். உடனடியாக ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து தற்போது பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

விஷுவல் எடிட்டர்

விஷுவல் எடிட்டர்

நடிகை வனிதாவின் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த விஷுவல் எடிட்டர்தான் பீட்டர் பால். அவரை மகள்களின் சம்மதத்துடன் நடிகை வனிதா கோலாகலமாகத் திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தில் முன்னாள் கணவர் ஆகாஷுக்கு பிறந்த ஜோவிதாவும், ஆனந்த் ஜெயராஜனுக்கு பிறந்த ஜெய்நிதாவும் மணப்பெண்ணின் தோழிகளாக இருந்து அம்மாவின் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட நடிகை வனிதா, லிப் லாக் முத்தத்துடன் திருமணத்தை உற்சாகமாகக் கொண்டாடினார். ஆனால், அந்த திருமணத்தில் பலரும் மாஸ்க் அணியாமல் இருந்ததை சமூக வலைதளத்தில் பலர் சாடியிருந்தனர். வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு திருமணம் ஆன நிலையில், தற்போது, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எலிசபெத் ஹெலன்

எலிசபெத் ஹெலன்

தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், இரண்டாவதாக வனிதாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதுபற்றி போலீசார், பீட்டர் பாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எலிசபெத் ஹெலன், பீட்டர் பாலின் இரு குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவ்வளவு வருடத்துக்குப் பிறகு ஹெலன் ஏன் புகார் கொடுக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.

பணம் பறிக்கவே புகார்

பணம் பறிக்கவே புகார்

இந்நிலையில் நடிகை வனிதா, தனது கணவரிடம் பணம் பறிக்கவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனின் புகார் பற்றி, நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது: இந்தப் புகார் எதிர்பார்த்ததுதான். எட்டு வருடத்துக்கு முன்பே பீட்டர் பால், அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். எங்கள் திருமண விவகாரம் கூட அவர்களுக்குத் தெரியும்.

சட்டரீதியாக எதிர்கொள்வோம்

சட்டரீதியாக எதிர்கொள்வோம்

அவர் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். அதற்காகவே இப்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். ஏற்கனவே இதுபோன்ற பல பிரச்னைகளை நான் சந்தித்திருக்கிறேன். இதனால் எங்கள் வாழ்க்கை பாதிக்க வாய்ப்பில்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்' என்று கூறியுள்ளார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X