சேதுபதியும் ஓடிட்டாருன்னா.. லவ் இருக்கு.. ரவீந்தர் என்னை விட பெரிய லூசு.. வனிதா விஜயகுமார் ஓபன்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 ஏற்கனவே வெறித்தனமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா விஜயகுமாரும் உள்ளே செல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர் என்கிற கேள்விக்கு சேதுபதியாவது ஷோவை நடத்தட்டுமே அவரும் ஓடிப்போயிட்டாருன்னா அப்புறம் பிக் பாஸ் ஷோவை நடத்துறது யாரு என வனிதா விஜயகுமார் சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8ல் முதல் போட்டியாளராக கலந்துக் கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிய ரவீந்தருடன் வனிதா விஜயகுமார் நேரடியாக நடத்திய உரையாடலில் பிக் பாஸ் பற்றியும் தனது சொந்த பர்சனல் காதல் பற்றியும் பல்வேறு விஷயங்களை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ளார்.

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை மறைமுகமாக கிண்டல் செய்கிறார் வனிதா விஜயகுமார் என்றும் கடந்த சீசனில் அவரது மகள் ஜோவிகா உள்ளே சென்று இருந்தார். பிரதீப் ஆண்டனி ரசிகர் வனிதாவை தாக்கியது உள்ளிட்ட சர்ச்சைகள் தான் கமல்ஹாசனை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வைத்ததா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ரவீந்தர் என்னை விட பெரிய லூசு: பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் ரவீந்தர் மற்றும் வனிதா விஜயகுமார் நேரடியாக பிக் பாஸ் சீசன் 8 பற்றி பேசிய பேட்டி வீடியோ டிரெண்டாகி வருகிறது. தொகுப்பாளினியை விட நான் ரொம்ப பெரிய லூசு என்றும் என்னை விட பெரிய லூசு ரவீந்தர் என்றும் வனிதா விஜயகுமார் சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.

காதல் இருக்கு: வனிதா விஜயகுமார் அடுத்த படம் எப்போ என்றும், வனிதா விஜயகுமார் அடுத்த ரிலீஸ் எப்போ என்றும் ரவீந்தர் போட்டு வாங்க காதல் இருக்கு என உளறி கொட்டி விட்டார் வனிதா விஜயகுமார். உடனடியாக வனிதா கன்னம் எல்லாம் சிவக்குது யாரு அந்த நபர் என கேட்க, அதெல்லாம் சொல்ல முடியாது என்றும் ஆனால், ஆள் இருப்பதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் உடன் அக்டோபர் 5ம் தேதி திருமணம் செய்துக் கொள்வது போல தனது அடுத்த படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தின் புரமோஷனை செய்திருந்தார் வனிதா விஜயகுமார். ஆனால், சீக்கிரமே வனிதா தனது அடுத்த திருமணத்தை அறிவிப்பார் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











