என் ஜோடி யாருன்னு தெரியுமா...வனிதா விஜயக்குமார் வெளியிட்ட ரகசியம்

சென்னை : 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரபலமாகவும், படு பிஸியாகவும் மாறி விட்டார் வனிதா விஜயக்குமார். சமூக வலைதளங்களிலும், தனது யூட்யூப் சேனலிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று, தனது சமையல் திறமையால் பலரையும் அசர வைத்தார். இதற்கிடையில் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார், வனிதா.

அதில் ஒன்று தான், தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்து வரும் 'அந்தகன்' படம். இதில் முக்கிய வேடம் ஒன்றில் வனிதா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் தனது கேரக்டர் பற்றிய ரகசியத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், வனிதா.

Recommended Video

Bigg Boss 5 BIG Announcement | Contestant List, Sunitha, Azeem, Radha Ravi

Vanitha Vijayakumar reveals pairing with busy actor in new movie

அதில் அவர், "இன்று 'அந்தகன்' பட செட்டில் நானும் இணைந்துள்ளேன். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறேன்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடிக்கிறார். அவரது மனைவி வேடத்தில் தான் வனிதா நடிக்க போகிறாராம்.

'அந்தகன்' படத்தில் சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார் நடிக்கும் காட்சிகள் கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியில் 'அந்ததுன்' என்ற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த 'அந்தகன்'. இதில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், 'நவரச நாயகன்' கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X