த்ரிஷாவும் ஜெயலலிதா மாதிரிதான்.. விஜய் 2 தொகுதியில் நிற்க காரணமே அவங்கதான்.. வனிதா விஜயகுமார் பளிச்

சென்னை: தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மொத்த இந்தியாவும் தற்போது மே 4 என்ற நாளுக்காகத்தான் காத்துக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளதால் பொதுமக்கள் இம்முறை வழக்கத்தைக் காட்டிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தக் காரணம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைதான். இப்படி இருக்கையில் விஜய்யின் அரசியல் நடவடிக்கைக்கு மிகவும் முக்கியமான காரணம், த்ரிஷா தான் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது, " நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட காரணமே த்ரிஷா தான். அதாவது விஜய் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். அவர் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். அதில் ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டு, அதில் த்ரிஷாவை போட்டியிட வைப்பார்.

Vanitha Vijayakumar s Bold Claim Is Trisha the Reason Behind Vijay s Dual Constituency Move

த்ரிஷா அதற்கு தகுதியானவர் தான், நன்றாக படித்தவர், நன்கு ஆங்கில பேசுவார். த்ரிஷா ஜெயலலிதாவைப் போல தான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நன்னடத்தை கொண்டவர், புத்திசாலி, மரியாதை தெரிந்தவர். எனக்குத் த்ரிஷாவை பர்சனலாகவும் தெரியும், அவர் அரசியல்வாதியாக இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்.

அவர் கட்டாயம் அரசியலில் களமிறங்குவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. த்ரிஷா போன்ற பெண் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அனைவரும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்த விவாதங்களை விட்டுவிட்டு, இருவருக்கும் எந்த அளவுக்கு அறிவும் திறமையும் இருக்கிறது என்று பாருங்கள். ஒருவரின் மனைவி, காதலி என்ற அடையாளம் மட்டுமே பெண்ணுக்கு கிடையாது. அதைக் கடந்து அவருக்கும் தனிப்பட்ட அடையாளம் உள்ளது, அறிவு உள்ளது, திறமை உள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து மற்றவர்கள் மிகவும் கொச்சையாக பேசுவதை பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

Vanitha Vijayakumar s Bold Claim Is Trisha the Reason Behind Vijay s Dual Constituency Move

வனிதா விஜயகுமார் இவ்வாறு தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பெரும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. மேலும் சிலரோ விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிட காரணம் அதுதானா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X