கலர் கோழி குஞ்சாக மாறிய வனிதா விஜயகுமார்.. வேற லெவல் குத்தாட்டம்.. மேக்கிங் வீடியோ இதோ!

சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் நடன போட்டியில் நல்லாவே டான்ஸ் ஆடவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், சமந்தா ரேஞ்சுக்கு சினிமாவில் ஐட்டம் பாடலுக்கே ஆட்டம் போட்டு அசத்தி உள்ளார் வனிதா விஜயகுமார்.

விரைவில் வெளியாகவுள்ள காத்து எனும் படத்திற்காக இப்படியொரு குத்து பாடலுக்கு நடனமாடி உள்ளார் வனிதா விஜயகுமார்.

கலரு குஞ்சு கோழி என தொடங்கும் அந்த பாடலை பாடி நடனமும் ஆடியுள்ளார் கானா பாலா.

ஐட்டம் டான்ஸ்

ஐட்டம் டான்ஸ்

நடிகை சமந்தாவை போலவே வனிதா விஜயகுமாருக்கும் இது அறிமுக ஐட்டம் சாங் என்பது குறிப்பிடத்தக்கது. தனது யூடியூப் பக்கத்தில் தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை ஷேர் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் கிடைத்த பிரபலத்தை கொண்டு தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

கலரு கோழி குஞ்சு

கலரு கோழி குஞ்சு

இயக்குநர் தவசி ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து எனும் படத்தில் இடம்பெற்றுள்ள கலரு குஞ்சு கோழி பாடலில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். மஞ்சள் நிற அதிக கவர்ச்சி இல்லாத உடையை அணிந்து கொண்டு வனிதா விஜயகுமார் ஆடியிருப்பது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேக்கிங் வீடியோ

கானா பாலாவுடன் இணைந்து நடிகை வனிதா விஜயகுமார் கலரு குஞ்சு கோழி பாடலுக்கு நடனமாடியுள்ள மேக்கிங் வீடியோ வெளியாகி யூடியூபில் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது. ஏகப்பட்ட ரசிகர்கள் டான்ஸ் சூப்பர் வனிதா அக்கா என கமெண்ட்டுகளை போட்டு வனிதா விஜயகுமாரை குஷிப்படுத்தி வருகின்றனர்.

தம்ப்நெயிலில் சமந்தா

தம்ப்நெயிலில் சமந்தா

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட குத்தாட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த மேக்கிங் வீடியோவின் தம்ப்நெயிலிலேயே சமந்தாவின் புகைப்படத்தை போட்டு வியூஸ்களை அள்ளி வருகிறார் வனிதா விஜயகுமார்.

மீண்டும் பிக் பாஸில்

மீண்டும் பிக் பாஸில்

பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் கலந்து கொண்டு வத்திக்குச்சி வனிதாவாக ரசிகர்கள் மத்தியில் டிரெண்டான வனிதா விஜயகுமார் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போகிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இனி 24 மணிநேரமும் பிக் பாஸ் அல்டிமேட்டில் வனிதா அக்காவின் வேற லெவல் கேமை ரசிகர்கள் கண்டு ரசிக்க ஆவலோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X