நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Vanitha கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது? மறுப்பு தெரிவித்த NanjilVijayan

தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயக்குமார். ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு மகள்களுடன்..

இரண்டு மகள்களுடன்..

முதல் கணவரான நடிகர் ஆகாஷுக்கு பிறந்த மகன் தனது அப்பாவுடன் செல்ல அவருக்கு பிறந்த மகள் மற்றும் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜனுக்கு பிறந்த பெண் குழந்தை என இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார் வனிதா.

பீட்டருடன் காதல்

பீட்டருடன் காதல்

அதன் பின்னர் தனியாக சமையல் நிகழ்ச்சிக்கு என யூட்யூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில்தான் தான் யூட்யூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த விஷுவல் எடிட்டரான பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது.

ஜூன் மாதம் திருமணம்

ஜூன் மாதம் திருமணம்

கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தனது பெற்றோரின் திருமண நாள் அன்று பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி கரம் பிடித்தார் வனிதா. ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

எலிசபெத் ஹெலன் என்ற மனைவியும் உள்ளார். ஆனால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால். இதனால் எலிசபெத் போலீஸில் புகார் அளிக்க வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையானது.

பீட்டருக்கு நெஞ்சுவலி

பீட்டருக்கு நெஞ்சுவலி

இந்நிலையில் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியூவில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

காரணத்துடன் நடக்கிறது

காரணத்துடன் நடக்கிறது

இதனிடையே நடிகை வனிதா ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதில். சொல்ல நிறைய உள்ளது... என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. கடவுள் மிகப் பெரியவர்... நம்பிக்கையுடன் இருங்கள்.. ஒவ்வொன்றும் ஒரு காரணத்துடனே நடக்கிறது...

எல்லாம் சரியாகிவிடும்

எல்லாம் சரியாகிவிடும்

வாழ்க்கை கடினமானது.. அதை எதிர்கொள்ளுங்கள்.. என்னை நம்புங்கள் .. எல்லாம் சரியாகிவிடும். .. கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்... உங்களால் முடிந்ததை உலகுக்கு காட்டுங்கள்.. இவ்வாறு வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வனிதாவுக்கு ஆறுதல்

வனிதாவுக்கு ஆறுதல்

இதனை பார்த்த நெட்டிசன்கள், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி என்று தகவல் வருகிறதே அது உண்மையா வனிதா அக்கா என அக்கறையுடன் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பீட்டர் பால் விரைவில் நலம் பெறுவார் என வனிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X