அடக்கடவுளே.. இதை ஏன் எனக்கு அனுப்புறீங்க.. வைரலான கொரோனா தேவி மீம்.. வனிதாவின் ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக சோக செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க அது தொடர்பான காமெடி மீம்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை சிரிக்க வைத்து வருகின்றன.
கொரோனா வைரஸை கொரோனா தேவி என மாற்றி கோயம்புத்தூரில் கோயில் கட்டி சிலையே வைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சிலையின் முகம் அப்படியே வனிதா விஜயகுமார் முகத்தை போலவே உள்ளதாக ஏகப்பட்ட மீம்கள் வைரலாகி வருகின்றன.

கொரோனா தேவி
கடவுளின் கோபத்தால் தான் கொரோனா வைரஸ் வந்துள்ளதாக சிலர் மூடநம்பிக்கை கொண்டுள்ளனர். குஜராத்தில் கோயில் ஒன்றில் பெண்கள் கூட்டம் கூட்டமாக அணி திரண்டு அபிஷேகம் செய்தததும் அதன் காரணமாகத்தான். இந்நிலையில், கோயம்புத்தூர்காரங்க கொஞ்சம் அட்வான்ஸா போயி கொரோனா தேவி சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

வனிதா முகத்தை போல
கொரோனா தேவியின் முகம் அப்படியே நடிகை வனிதா விஜயகுமார் போலவே உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். ஏகப்பட்ட பேர், அக்கா கொரோனா தேவி உங்கள மாதிரியே இருக்காங்க என்றும், நீங்க தான் அந்த கொரோனா தேவியா என்றும் கேட்டு அவருக்கே மெசேஜ் பண்ணி வருகின்றனராம்.

வனிதா ட்வீட்
இந்நிலையில், அந்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை வனிதா விஜயகுமார், அடக்கடவுளே.. என்னது இது.. இதை ஏன் எல்லாரும் எனக்கு ஷேர் பண்றாங்க என போட்டுள்ள ட்வீட் சமூகவலைதளத்தில் மேலும் சிரிப்பலையை எழுப்பி வைரலாகி வருகிறது.

வனிதாவுக்கு சிலை
என்னடா கொரோனா தேவிக்கு சிலை வைக்கிறேன்னு வனிதாவுக்கு சிலை வச்சிருக்கீங்க என கோயம்புத்தூர் மக்களை பார்த்து கேட்பது போல உருவாக்கப்பட்ட வடிவேலுவின் வைரல் மீம் செம டிரெண்டாகி உள்ளது. பிக் பாஸ், குக் வித் கோமாளி என சின்னத்திரையில் கலக்கி வரும் வனிதாவின் கண்களுக்கும் அந்த மீம் தென்பட்டுள்ளது.
Recommended Video

ஜெய் கொரோனா தேவி
அந்த மீமை பார்த்த வனிதா விஜயகுமார் கோபம் கொள்ளாமல் செம ஜாலியாக அதனை தனது ட்விட்டரில் ஷேர் செய்து ஜெய் கொரோனா தேவி என ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே அவரை ட்ரோல் செய்தும், அவரது பாசிட்டிவிட்டியை ஆதரித்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











