கவினுக்கு சல்யூட்.. வனிதாவிடம் வந்த திடீர் மாற்றம்.. என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயக்குமார் கவினுக்கு சல்யூட் அடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கவின் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த சீசன்களில் கொடுத்த ஆப்ஷன்களை போல் இந்த சீசனிலும் 5 லட்சம் ரூபாயை கொடுத்து போக விரும்புபவர்கள் போகலாம் என்று கூறினார்.
இதனைக்கேட்ட கவின் தான் வெளியே போவதாக கூறி பிக்பாஸிடம் கூறினார். ஆனால் இதனை ஏற்காத ஹவுஸ்மேட்ஸ், கவினை போகக்கூடாது என கூறி வற்புறுத்தினர்.

இந்த வாய்ப்பு கிடைக்காது
குறிப்பாக சாண்டியும் லாஸ்லியாவும் கவினை வெளியே போகக்கூடாது என்று கூறி அழுதனர். ஆனால் அதனை கொஞ்சமும் கேட்காத கவின், இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது, இதனை நான் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இத்தனை நாள் நான் இங்கிருந்தது வேஸ்ட், நான் பேசியதெல்லாம் வேஸ்ட் என்று கூறினார்.

ஹவுஸ்மேட்ஸ் சோகம்
மேலும் தன்னை நல்லபடியாக வெளியே அனுப்பி வையுங்கள் என்று கூறி, அனைவரின் பேச்சையும் மீறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின். கவினின் இந்த திடீர் வெளியேற்றத்தால் ஹவுஸ்மேட்ஸ்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
வனிதா சல்யூட்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறிய வனிதா, கவின் வெளியேறியது குறித்து டிவிட்டியுள்ளார். அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, நான் கவின் எடுத்த முடிவிற்கு வணக்கம் செலுத்துகிறேன்.

விதியை மீறவில்லை
அதை தியாகம் என்று சொல்லுங்கள் அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். கவின் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தார். அவர் எந்த விதியையும் மீறவில்லை, எந்த டிராமாவும் செய்யவில்லை. கவின் தனது மனசாட்சிப்படி எழுந்துநின்று நிரூபித்து விட்டான். இவ்வாறு வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குழம்பிய பார்வையாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது முறையாக வந்த வனிதா, வொர்த் இல்ல கவின் வொர்த் இல்ல, என்று கூறி அவரின் காதல் விளையாட்டுக்களை டிராமா எனக்கூறி கடுமையாக சாடினார். இந்நிலையில் வனிதாவே கவினுக்கு சல்யூட் தெரிவித்திருப்பது பார்வையாளர்களை குழப்பியிருக்கிறது.
ஏன் மாத்திப் பேசுறீங்க?
இதனை ரசிகர்கள் அவரிடமே நேரடியாக கேட்டு வருகின்றனர். நீங்கள்தான் டிராமா பண்றான்னு சொன்னீங்க நீங்களே இப்படி மாற்றி பேசுகிறீர்களே என்று கூறி அவரை விளாசி வருகின்றனர்.
திரும்ப படிச்சு பாருங்க
ரசிகர்கள் திட்டுவதை பார்த்த வனிதா, கவினை பற்றிய எனது டிவிட் யாருக்கெல்லாம் புரிய வில்லையோ அவர்கள் மீண்டும் எனது டிவிட்டை படியுங்கள். நீங்கள் குழம்பியிருக்கிறீர்கள் என்று கூறி கவின் குறித்த தனது டிவிட்டை பின் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











