எங்கப்பாவை நினைச்சி திட்டினேன்.. பிரசாந்தின் அந்தகன் விழாவில் வனிதா விஜயகுமார் பளிச்!

சென்னை: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை தள்ளிப் போகக் கூடாது என்கிற முடிவுடன் ஆகஸ்ட் 9ம் தேதியே படத்தை வெளியிடுகின்றனர்.

சமீபத்தில், அந்தகன் படத்தின் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி மாறிய நிலையில், இன்று புதிய டிரெய்லர் ஒன்றை வெளியிட்டு டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினர்.

Anthagan Vanitha Vijayakumar Vijayakumar

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், வனிதா விஜயகுமார் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்தாதூன் ரீமேக்: இந்த ஆண்டு விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்பை வைத்து மெரி கிறிஸ்துமஸ் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான மிரட்டலான படம் தான் அந்தாதூன். அந்த படத்தை மலையாளத்தில் பிருத்விராஜ் ரீமேக் செய்து நடித்து ஹிட் கொடுத்தார். இந்நிலையில், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அந்தகன் சில ஆண்டு காலதாமதத்திற்கு பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

டபுள் ட்ரீட் வெயிட்டிங்: இந்த ஆண்டு டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து அவரை ஹீரோவாக அந்தகன் படத்தில் பார்க்கப் போகின்றனர் ரசிகர்கள். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்திலும் முக்கிய ரோலில் பிரசாந்தின் நடிப்பை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

வனிதா விஜயகுமார் ரோல்: சமுத்திரகனியை திட்டித் தீர்க்கும் மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இந்தியிலும் அப்படியொரு கதாபாத்திரம் இருக்கும். அதை விட தமிழில் வனிதா விஜயகுமார் அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக இயக்குநர் தியாகராஜன் கூறியுள்ளார்.

அப்பாவை நினைச்சு திட்டினேன்: சமுத்திரகனியை படத்தில் கண்டபடி திட்டித் தீர்க்கும் கதாபாத்திரத்தில் எப்படி நடிச்சீங்க என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு சட்டென எங்கப்பாவை நினைச்சுத்தான் திட்டினே என சொல்லி விட்டார். ஒரு சின்ன 'pause' விட்டு எங்கப்பா விஜயகுமார் ஒரு சிறந்த நடிகர் அவருடைய பொண்ணு நான் நடிப்பு ரத்தத்திலேயே ஊறியிருக்கு, அதை நினைச்சுத்தான் நடித்தேன் என சாமர்த்தியமாக பதில் அளித்து அப்ளாஸ் அள்ளி விட்டார்.

மனசுல அந்த வலி: தனது மகன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக பிரபு சாலமன் படஹ்ட்தில் நடிக்கும் படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், தன்னால் அங்கு செல்ல முடியவில்லை என்கிற வலி அவருக்குள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து அந்தகன் பட விழாக்களில் கலந்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார் தன்னை ஒதுக்கிய அப்பா விஜயகுமார் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தி திருமணத்துக்கு கூட வனிதா விஜயகுமாரை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரீத்தா, ஸ்ரீதேவி, அருண் விஜய் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்துக் கொண்ட விழாவில் வனிதா மட்டும் இல்லாதது அவரை ரொம்பவே வாட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X