கமல் வாய்ப்பெல்லாம் தரமாட்டார்.. கட்டிப்புடிச்சு முத்தம் வேணா கொடுப்பாரு.. வனிதா விஜயகுமார் பகீர்!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்புத் தருவதாக கமல்ஹாசன் ஒரு பேச்சுக்கு மட்டுமே சொல்வார் என்றும் வாய்ப்புக் கேட்டு சென்றால், கட்டியணைத்து முத்தம் மட்டுமே கொடுப்பார் என வனிதா விஜயகுமார் சமீபத்தில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு எதிராக ஏகப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வாய் திறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதற்கு எதிராக ஆரி அர்ஜுனன், சிநேகன், கவின், பிரியங்கா தேஷ்பாண்டே, பாவனி, நிரூப், சனம் ஷெட்டி உள்ளிட்ட பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் விஜய் டிவி பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கமல் வாய்ப்பு தரமாட்டார்: பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய மேடை 100 நாட்கள் மக்கள் உங்கள் திறமையை பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிக் பாஸ் பிரபலங்கள் என்றே அறியப்படுவீர்கள் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிலும் சொல்லி வருகிறார். ஆனால், கமல்ஹாசன் யாருக்குமே வாய்ப்புக் கொடுக்க மாட்டார் என வனிதா விஜயகுமார் பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
கட்டிப்புடிச்சு முத்தம் கொடுப்பார்: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சார் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டேன் என்றும் அதற்கு அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். ஆனால், எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு தரவில்லை எனக்கூறியுள்ளார். மேலும், பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்ட போது கூட கமல் சார் வாய்ப்புத் தரவில்லை என்றார்.
தர்ஷன் படம் என்னாச்சு?: பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தில் அவரை ஹீரோ ஆக்குகிறேன் என கமல் வாக்கு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பே தரவில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் வனிதாவின் பேச்சுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஷிவானி முதல் மாயா வரை பலருக்கு வாய்ப்பு: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணனை விக்ரம் படத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார் கமல்ஹாசன் என்றும் அந்த படத்தில் நடித்த மைனா மற்றும் மகேஸ்வரிக்கு அடுத்த சீசன்களில் வாய்ப்புக் கொடுத்தார் என்றும் விக்ரம் மற்றும் லியோ படத்தில் நடித்த மாயாவுக்கும் இந்த சீசனில் வாய்ப்புக் கிடைத்ததே என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications