நான் என்ன திருடியா?.. இளையராஜாவுக்கு வேறு வேலை இல்லையானு கேட்குறாங்க.. எகிறிய வனிதா விஜயகுமார்
சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி மிஸஸ்&மிஸ்டர் திரைப்படம் வெளியானது. அதனை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார். தான் இசையமைத்திருந்த சிவராத்திரி பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக பேசினார் வனிதா விஜயகுமார்.
விஜயகுமாரின் மகளான வனிதா; இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தனது மகள் ஜோவிகாவை தயாரிப்பாளராக வைத்து Mrs&Mr என்ற படத்தை இயக்கினார். இதில் அவருடன் ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, கிரண் என பலர் நடித்திருந்தார்கள். வனிதா இயக்கியிருக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடமும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
அட்டர் ஃப்ளாப்: ஆனால் அந்த எதிர்பார்ப்பை துளிக்கூட படம் நிவர்த்தி செய்யவில்லை. ஏகப்பட்ட கிரிஞ்ச் காட்சிகள், ஆபாச காட்சிகள் படம் முழுக்க நிரம்பி கிடந்ததாகவும்; ஏனோதானோவென்று இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். தியேட்டரில்தான் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை; ஓடிடியிலாவது தள்ளிவிடலாம் என நினைத்திருந்த அவருக்கு பெரிய அதிர்ச்சியாக; எந்த ஓடிடி நிறுவனமும் படத்தை வாங்கவில்லை.
யூடியூபில் ரிலீஸ்: இதன் காரணமாக ஷாக்கான வனிதா; யூடியூபில் தனது சேனலில் படம் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்கிடையே மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இளையராஜா இசையமைத்த சிவராத்திரி பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார் வனிதா. ஆனால் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தி; தனது புகைப்படத்தையும் யூஸ் செய்து விளம்பரம் செய்கிறார்கள் என இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குண்டு போட்ட வனிதா: இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, 'படம் ரிலீஸாகிவிட்டதால் இனி தடை செய்ய முடியாது. வேண்டுமானால் மனுதாரர் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்' என கூறிவிட்டது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க; இந்த விவகாரத்திலேயே பெரிய அதிர்ச்சி கிளம்பியது என்றால் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, ' நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியவள்' என குண்டை போட்டதுதான். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது.
வனிதாவின் பேட்டி: இந்நிலையில் இன்று நீதிமன்றம் வந்த வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி வாங்கினோம். இளையராஜாவுக்கு நாங்கள் படத்தில் நன்றி கூறியிருந்தோம். ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்தவுடன் அவருக்கு போட்டிருந்த நன்றி கார்டை எடுத்துவிட்டோம். அவர் எனக்கு ஃபோன் செய்து ஏன் மா எனது புகைப்படத்தை போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கலாம். அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் நான் என்னமோ திருடி மாதிரி அவர் ட்ரீட் செய்கிறார். இப்போது நான் ஒரு வாடகை காரில்தான் வந்தேன். அந்த ட்ரைவருக்கு இந்தப் பிரச்னை தெரியும்.
வந்துகொண்டிருந்தபோது அவர் என்னிடம், 'இளையராஜாவுக்கு வேறு வேலையே இல்லையா?" என்று கேட்கிறார். அவர் வழக்கு போட்டது ராஜாவுக்கு மரியாதையை கொடுக்கவில்லை என்பதை மட்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் என்னிடம் ஃபோன் செய்து திட்டியிருக்கலாம். ஆனால் பணம் வேண்டும் என்று கேட்கிறார். அவருக்கு கொடுக்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











